
Bigg Boss Tamil Season 8 Second Week Captain, Nomination Process: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ஸ்லோவாக சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. 18 போட்டியாளர்கள் கொண்ட இந்நிகழ்ச்சியில் 24 மணிநேரத்திற்குள்ளாக ஹவுஸ்மேட்ஸால் எலிமினேட் செய்யப்பட்ட சாச்சனா நேமிதாஸ் வைல்டு கார்டு எண்ட்ரி மூலமாக திரும்ப வந்தார். உடல்நல பிரச்சனைகளை தாங்கிக் கொண்டு ஒருவாரம் சமாளித்த ரவீந்தர் சந்திரசேகர் முதல் வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.8ஆவது நாளான இன்று இந்த வாரத்திற்கான தலைவர் மற்றும் நாமினேஷனுக்கான டாஸ் நடைபெற்றது. கேப்டனுக்கான போட்டியில் பெண்கள் அணியிலிருந்து ஜாக்குலின், சவுந்தர்யா மற்றும் பவித்ரா ஆகியோரும் ஆண்கள் அணியிலிருந்து விஷால், சத்யா மற்றும் தீபக் ஆகியோரும் போட்டியில் பங்கேற்றனர்.
தலைவனா – தலைவியா? என்ற போட்டியில் பிளாக்கில் லாக் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சத்யா மற்றும் பவித்ராவை தவிர எல்லோரும் ஆட்டமிழக்க கடைசி வரை போராடிய பவித்ரா இறுதியில் ஆட்டமிழந்தார்.இதனால், ஆண்கள் அணியில் சத்யா வெற்றி பெற்று இந்த வாரத்திற்கான கேப்டனாக பொறுப்பேற்றார்.
இதற்கிடையில் சுனிதா மற்றும் தர்ஷிகா இருவரும் இடையில் போட்டியை தவறாக சொல்றீங்க என்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அணி மாறும் படலம் நடைபெற்றது. இதில் ஆண்கள் அணியிலிருந்து தீபக் மற்றும் பெண்கள் அணியிலிருந்து தர்ஷா இருவரும் வீடி மாறினர்.
தலைவனான சத்யாவிற்கு ஏ23 கிங் கிரவுனை முதல் வார கேப்டனான தர்ஷிகா சூடினார். அதன் பிறகு முத்துக்குமரன் மற்றும் அன்ஷிதா இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. முத்துக்குமரன் திமிராகவும், தெனாவட்டாக இருப்பதாகவும், சந்தர்ப்பம் சூழ்நிலை அறிந்து மாற்றி மாற்றி பேசுவதாகவும் அன்ஷிதா குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அன்ஷிதாவை சமாதானம் செய்தனர். இறுதியாக 2ஆவது வார நாமினேஷ பிராசஸ் தொடங்கியது. இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்ற 2 நபர்களை சரியான காரணம் சொல்லி ஒவ்வொரு போட்டியாளரும் நாமினேட் செய்ய வேண்டும்.
கேப்டனான சத்யாவையும், விடுதலை பாஸ் பெற்ற அருண் பிரசாத்தையும் யாரும் நாமினேட் செய்ய முடியாது. கடந்த வாரம் அணி மாறிய பவித்ரா மற்றும் முத்துக்குமரன் ஆகியோருக்கு நேரடியாக நாமினேஷன் செய்யும் பவர் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை இருவருமே பயன்படுத்தினர்.
மேலும் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் தான் நாமினேட் செய்ய வேண்டும் என்று விதி இந்த வாரம் அமல்படுத்தப்பட்டது. ஜனனி மற்றும் முத்துக்குமரனைத் தவிர மற்ற அனைவரும் கன்பெஷன் ரூமிற்கு சென்று நாமினேஷன் செய்தனர். இந்த வார எவிக்ஷன் பிராசஸிற்கு நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் ரஞ்சித், முத்துக்குமரன், ஜெஃப்ரி, விஷால், அர்னவ், சாச்சனா, தர்ஷா, சவுந்தர்யா மற்றும் தீபக் மற்றும் ஜாக்குலின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் ரஞ்சித் எலிமினேட் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியில்லை என்றால் 2ஆவது முறையாக சாச்சனா வெளியேஎற்றப்படுவார் என்று தெரிகிறது. கடைசியாக இந்த வாரத்திற்கு சமையலுக்கான ஷாப்பிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் 2 லெவல் நடைபெற்றது. ஒரு லெவல் டாஸ்க்கிற்கு உருட்டு என்று டைட்டில் வைக்கப்பட்டது. இதில், பிபி கரன்ஸியை அதிகமாக எடுக்க வேண்டும்.
இந்த போட்டிக்கு பெண்கள் அணியிலிருந்து சாச்சனாவும், ஆண்கள் அணியிலிருந்து அர்னவ்வும் தேர்வு செய்யப்பட்டனர். எப்படி உருண்டு பிரள வேண்டும் என்று என்பதற்காக ரெஸ் ரூம் செல்வதாக பொய் சொல்லிவிட்டு வாஷிங் ரூமிற்கு சென்று உருண்டு பழகினார். கடைசியாக இந்த டாஸ்கில் ஆண்கள் அணியில் 6200 பிபி கரன்ஸியும், பெண்கள் அணியில் 4600 பிபி கரன்ஸியும் எடுத்தனர்.
லெவல் 2 டாஸ்கில் சுனிதாவும், அருண் பிரசாத்தும் பேர் பங்கேற்றனர். சுனிதா 3000 பிபி கரன்சி பெற்றார். அருண் பிரசாத் 2500 பிபி கரன்சி எடுத்தார். இந்த பிபி கரன்சியை வைத்து ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் ஷாப்பிங் செய்தனர். இது அவர்களுக்கு போதுமானதாக இருந்ததா? ஆண்களை விட பெண்கள் அதிகமாக ஷாப்பிங் செய்தார்களா? என்பது இந்த வாரம் தெரியவரும்.