ஆரம்ப காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வில்லனாக நடித்து ரவி மரியா, கடந்த சில ஆண்டுகளாகவே நகைச்சுவை ததும்பும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணனை சந்தித்து பேசிய அவர் "ஆசை ஆசையாய்" திரைப்படத்திற்கு முன்னதாகவே குஷி திரைப்படம் முடிந்தவுடன், விஜய்க்கு தான் ஒரு கதையை கூறியதாகவும். கட்டாயம் நேரம் கிடைக்கும் பொழுது அந்த படத்தில் தான் நடிப்பதாக விஜய் கூறியதாகவும் ரவி மரியா கூறி இருக்கிறார்.
இருப்பினும் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையில் இந்த படம் தடைப்பட்டு கொண்டே வந்திருக்கிறது. "நான் கடந்த 2014 ஆம் ஆண்டு தளபதி விஜயோடு இணைந்து "ஜில்லா" என்கின்ற திரைப்படத்தில் நடித்தேன். அப்போது கூட செட்டில் என்னை பார்த்த உடனே என்னிடம் வந்து, என்ன அண்ணா உருண்டு பிரண்டு ஒரு கதை சொன்னிங்க, அது இன்னும் இருக்கா என்று என்னிடம் கேட்டார். உங்களுக்காக தான் தினமும் அந்த கதையை அயன் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் அதற்கான நேரம் அமையும் என்று கூறினேன்" என்றார் ரவி.