முன்பெல்லாம் புதுப்படங்கள் என்றாலே தியேட்டரில் சென்று தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. ஆனால் தற்போது ஒரு மாதம் காத்திருந்தாலே எந்த புதுப்படமாக இருந்தாலும் ஓடிடியில் பார்த்துவிடலாம் என்கிற நிலை மாறி இருக்கிறது. அப்படி கடந்த அக்டோபர் 7 முதல் 13-ந் தேதி வரை ஓடிடி தளங்களில் அதிக பார்வைகளை பெற்ற டாப் 10 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் முழு பட்டியலை பார்க்கலாம்.
211
Raat Jawaan Hai
10. சுமித் வியாஸ் இயக்கத்தில் இந்தியில் வெளியாகி உள்ள வெப் தொடர் தான் Raat Jawaan Hai. இந்த வெப் தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இது டாப் 10 பட்டியலில் 16 லட்சம் பார்வைகளுடன் 10 வது இடத்தில் உள்ளது.
311
Highway Love s2
9. சாஹிர் ராசா இயக்கத்தில் கடந்த அக்டோபர் 6-ந் தேதி வெளிவந்த வெப் தொடர் தான் ஹைவே லவ் சீசன் 2. எம்.எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் இந்த வெப் தொடர் 17 லட்சம் பார்வைகளுடன் 9-ம் இடம் பிடித்துள்ளது.
411
Playground 4
8. அமேசான் எம்.எக்ஸ். பிளேயர் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் Playground வெப்தொடரின் நான்காவது சீசன் இந்த வாரம் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர் பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளது. இதனை 18 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
511
The Penguin
7. ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள தி பெண்குயின் என்கிற வெப் தொடர் தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. 7ம் இடத்தில் உள்ள இதனை 19 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
6. ஓம்கார் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வரும் வெப் தொடர் தான் The Tribe. கடந்த அக்டோபர் 4ந் தேதி ரிலீஸ் ஆன இந்த வெப் தொடர் 24 லட்சம் பார்வைகளுடன் டாப் 10 பட்டியலில் 6ம் இடம் பிடித்துள்ளது.
711
The Signature
5. கஜேந்திரா இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்தி திரைப்படம் தான் The Signature. இந்த படத்தில் அனுபம் கேர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்தப்படம் 25 லட்சம் பார்வைகளுடன் 5ம் இடத்தில் உள்ளது.
811
Amar Prem Ki Prem Kahani
4. ஓரினச்சேர்க்கையை மையமாக வைத்து இந்தியில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் Amar Prem Ki Prem Kahani. ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த திரைப்படம் 26 லட்சம் பார்வைகளுடன் 4-ம் இடம்பிடித்துள்ளது.
911
CTRL Movie
3. விக்ரமாதித்யா இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான படம் தான் CTRL. திரில்லர் திரைப்படமான இது 29 லட்சம் பார்வைகளுடன் 3ம் இடம் பிடித்து இருக்கிறது.
1011
The Great Indian Kapil Sharma Show
2. கடந்த வாரம் மூன்றாம் இடத்தில் இருந்த கபில் ஷர்மாவின் The Great Indian Kapil Sharma Show நிகழ்ச்சி இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட்ஃபிளிக்ஸில் ஸ்டிரீம் ஆகி வரும் கபில் ஷர்மாவின் இந்த நிகழ்ச்சி 38 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
1111
Taaza Khabar 2
1. பூவன் பாமின் இயக்கியுள்ள Taaza Khabar என்கிற வெப்தொடரின் இரண்டாவது சீசன் தான் டாப் 10 பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த வெப் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. இந்த வெப் தொடர் 42 லட்சம் பார்வைகளை பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.