மகளுக்காக வலிகள் நிறைந்த வரிகளுடன் யுகபாரதி எழுதி ஹிட்டடித்த பாடல் பற்றி தெரியுமா?
பாடலாசிரியர் யுகபாரதி, அமரன் படத்திற்காக எழுதிய சூப்பர் ஹிட் பாடலின் வரிகள், அவர் தன் மகளுக்காக எழுதியது என பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
பாடலாசிரியர் யுகபாரதி, அமரன் படத்திற்காக எழுதிய சூப்பர் ஹிட் பாடலின் வரிகள், அவர் தன் மகளுக்காக எழுதியது என பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
Yugabharathi Reveals Amaran Movie Song Secret : தமிழில் பல சூப்பர்ஹிட் பாடல்களை எழுதி உள்ளார் பாடலாசிரியர் யுகபாரதி. அண்மையில் அவர் அமரன் படத்திற்காக எழுதிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அந்த பாடலில் தனது மகளுக்காக சில வரிகளை எழுதியதாக யுகபாரதி கூறி இருக்கிறார். மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த பாடலை எழுதியதாக பாடலாசிரியர் யுகபாரதி கூறி இருக்கிறார்.
யுகபாரதி மகளுக்கு ஏற்பட்ட பிரச்சனை
பாடலாசிரியர் யுகபாரதியின் மகள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருக்கிறாராம். தேர்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன், தலைவலிப்பதாக கூறினாராம். சரியாகிவிடும் என நினைக்க, ஒரு வாரம் ஆகியும் அந்த தலைவலி சரியாகவில்லையாம். பின்னர் பல்வேறு வைத்தியங்கள் பார்த்தும், வலி தான் அதிகரித்துக் கொண்டே இருந்ததாம். தலைவலி பின்னர் முதுகுவலி என ஒவ்வொரு பாகமாக வலி அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது.
பதறிப்போன யுகபாரதி
ஒரு கட்டத்தில் தனக்கு கண் பார்வையில் பாதிப்பு இருப்பதாகவும் அனைத்தும் இரண்டு இரண்டாக தெரிவதாக கூறி இருக்கிறார். கேட்டதும் பதறிப்போன யுகபாரதி, தன் மகளை நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கரிடம் அழைத்து சென்றிருக்கிறார். அவர் பரிசோதித்துவிட்டு, நரம்பியல் மருத்துவரிடம் அழைத்து செல்ல சொல்லி இருக்கிறார். இதையடுத்து நரம்பியல் மருத்துவரிடம் அழைத்து சென்றபோது தான் diplopia என்கிற நோய் பாதிப்பு அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
இதையும் படியுங்கள்... ஜெயம் ரவி படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாடல்; விஜய்க்கு கொடுத்து ஹிட்டாக்கிய யுகபாரதி!
பாடல் மூலம் அன்பை காட்டிய யுகபாரதி
இயல்பிலேயே ஏற்படும் அழுத்தங்களை குழந்தைகள் வெளிப்படுத்தவில்லை என்றால் அவர்கள் diplopia-வால் பாதிக்கப்படுவார்களாம். பின்னர் ஊசிபோட்ட பின் தலைவலி குறைந்துவிட்டது. ஆனால் மகளின் கண்பார்வையில் உள்ள பிரச்சனை மட்டும் தீரவில்லையாம். அது குணமடைவதை உறுதியாக சொல்ல முடியாது என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம். அப்போது அமரன் படத்திற்கு பாடல் எழுத வேண்டிய சூழல் வர, மகள் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக வென்னிலவு சாரல் நீ என்கிற பாடலை எழுதி இருக்கிறார் யுகபாரதி.
“பாதி நீயே என் பாதி நீயே
நீயில்லாமல் நான் ஏது கண்ணே
ஆதி நீயே என் ஆயுள் நீயே
ஆணி வேரை நீங்காது மண்ணே
எங்கே இருள் என்றாலும்
அங்கே ஒளி நீதானே
கண்ணா எனை நீயே காக்க
கண்ணீரையும் காணேனே
நீண்ட தூரம் போன போதும்
நீங்குமோ காட்சியே”
என்கிற வரிகள் தன் மகளுக்காக எழுதியது என யுகபாரதி கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... வித்யாசாகரை கோபத்தில் கண்டபடி திட்டி யுகபாரதி எழுதிய பாட்டு - சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?