விடாமுயற்சி லைஃப் டைம் வசூல் சாதனையை 4 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய குட் பேட் அக்லி!

Published : Apr 14, 2025, 01:08 PM IST

அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம், நான்கே நாட்களில் விடாமுயற்சி பட லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.

PREV
14
விடாமுயற்சி லைஃப் டைம் வசூல் சாதனையை 4 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய குட் பேட் அக்லி!

Good Bad Ugly Beat Vidaamuyarchi Lifetime Box Office : 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் சக்சஸ்புல் நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவருக்கு தற்போது வயது 50ஐ கடந்துவிட்டாலும், அதே இளமையான தோற்றத்துடன் காட்சியளிப்பதோடு, ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக அஜித் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறார் அஜித். அவர் நடிப்பில் கடந்த 3 மாதங்களில் 2 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன.

24
Vidaamuyarchi

சொதப்பிய விடாமுயற்சி

அதில் ஒன்று விடாமுயற்சி. அப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 6ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இது ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக்டவுன் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்தை அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது. 250 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெறும் 137 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது.

இதையும் படியுங்கள்... 10 ஆண்டுகளில் அஜித் படங்களின் வசூல்; மொத்தமே இவ்வளவுதானா? அதிர வைக்கும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

34
Good Bad Ugly

தட்டிதூக்கிய குட் பேட் அக்லி

விடாமுயற்சி சொதப்பியதால் அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை தான் மலைபோல் நம்பி இருந்தனர். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரூ.280 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இப்படத்தை தரமான ஃபேன் பாய் சம்பவமாக கொடுத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.

44
Good Bad Ugly Box Office Record

விடாமுயற்சியை ஓவர்டேக் பண்ணிய குட் பேட் அக்லி

திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் குட் பேட் அக்லி திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆன நான்கு நாட்களில் உலகளவில் ரூ.145 கோடி வசூலித்துள்ளதாக காம்ஸ்கோர் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சியின் லைஃப் டைம் வசூல் சாதனையை குட் பேட் அக்லி நான்கே நாட்களில் முறியடித்து உள்ளது. இன்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் குட் பேட் அக்லியின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 2025-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories