ஏகேவின் தக் லைஃப் சம்பவம்! ஜிடி4 கார் ரேஸில் சிங்கம் போல் சிங்கிளாக கலந்துகொண்ட அஜித்

ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 கார் பந்தயத்தில் கலந்துகொண்ட நடிகர் அஜித், தனி ஒருவனாக பங்கேற்று கெத்து காட்டி இருக்கிறார்.

Ajith Kumar Competes Solo in GT4 European Car Race gan

Ajith's action! He competes as a solo hero in the GT4 car race! நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி கார் ரேஸிலும் அதீத ஆர்வம் காட்டி வருகிறார். விபத்தில் சிக்கிய காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக கார் பந்தயத்தில் கலந்துகொள்ளாமல் இருந்த அஜித், இந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற 24 மணிநேர கார் பந்தயத்தில் தன்னுடைய அஜித்குமார் ரேஸிங் அணியுடன் கலந்துகொண்டார். அந்த கார் பந்தயத்தில் அஜித்தின் அணி மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தியது.

Ajith Kumar Competes Solo in GT4 European Car Race gan
Ajithkumar Racing

கார் ரேஸில் பிசியான அஜித்

கார் ரேஸில் வெற்றி பெற்ற பின்னர் பேட்டியளித்த அஜித், இனி கார் பந்தயத்தில் முழு கவனம் செலுத்த உள்ளதாகவும், அக்டோபர் மாதம் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். துபாய் கார் பந்தயத்தில் வெற்றிபெற்ற பின்னர் ஐரோப்பாவிற்கு சென்ற அஜித், அங்கு ஜிடி 4 கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக பயிற்சி எடுத்து வந்தார். அவர் படம் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டாலும் அதன் வெற்றியை கொண்டாட முடியாத அளவுக்கு கார் ரேஸில் செம பிசியாக உள்ளார் அஜித்குமார்.

இதையும் படியுங்கள்... திரையரங்கில் விஜய் ரசிகர்களை வெளுத்த அஜித் ரசிகர்கள்! ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட வீடியோ!


Ajith Participate in GT4 Race

தனி ஒருவனாக களமிறங்கிய அஜித்

இந்நிலையில், ஐரோப்பாவில் ஜிடி4 கார் பந்தயம் ஆரம்பமாகி உள்ளது. அதில் 2 பேர் அணியாக பங்கேற்கக்கூடிய பந்தயத்தில் நடிகர் அஜித் ஒற்றை ஆளாக பங்கேற்று இருக்கிறார். பந்தய விதிப்படி இருவர் பங்கேற்றால் ஒரு ஓட்டி முடித்த பின்னர் மற்றொருவர் கார் ரேஸில் களமிறங்குவார். அதே ஒருவர் மட்டும் பங்கேற்றால் அவர் கண்டிப்பாக காரை நிறுத்தி அதிலிருந்து இறங்கி மீண்டும் காரில் ஏற்ற வேண்டும். அஜித் அவ்வாறு தான் அந்த பந்தயத்தில் கலந்துகொண்டுள்ளார்.

Ajith movies

அஜித்தின் டபுள் தமாக்கா

நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. இதில் கடந்த பிப்ரவரியில் அவர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் தோல்வியை தழுவிய பின்னர் கடந்த ஏப்ரல் 10ந் தேதி அஜித் நடித்த மற்றொரு படமான குட் பேட் அக்லி ரிலீஸ் ஆனது. அப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. நடிகர் அஜித்தின் கம்பேக் படமாக குட் பேட் அக்லி அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... வீர தீர சூரனை விரட்டிவிட்ட குட் பேட் அக்லி; வசூலில் வாஷ் அவுட் ஆன விக்ரம் படம்!

Latest Videos

vuukle one pixel image
click me!