அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா
சமந்தா, அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளியான சன் ஆஃப் சத்யமூர்த்தி திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது இந்த காம்போ மீண்டும் இணையவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அந்த படம் வேறு எதுவும் இல்லை, அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படம் தான் அது. இந்த பான் இந்திய திரைப்படம் சமீபத்தில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டது.
சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகும் இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் பட்ஜெட் செலவிடவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முதலில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தில் பிஸியாக இருக்கிறார். அதனால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு இந்த கதையை சரியாக கையாளக்கூடிய கதாநாயகி சமந்தா என்று படக்குழு நினைத்ததாம். மேலும் இயக்குனர் அட்லீ ஏற்கனவே சமந்தாவுடன் ‘மெர்சல்’, ‘தெறி’ போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். அல்லு அர்ஜுனும் சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம்.