அனிருத், ஏ.ஆர்.ரகுமான், யுவன் சாதனைகளை முறியடித்த சாய் அபயங்கர்!
அடுத்த அனிருத் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் சாய் அபயங்கர், இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், அவர் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் சாதனைகளை முறியடித்துள்ளார்.
அடுத்த அனிருத் ரேஞ்சுக்கு கொண்டாடப்படும் சாய் அபயங்கர், இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், அவர் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் சாதனைகளை முறியடித்துள்ளார்.
Sai Abhyankkar Create New Record : அல்லு - அட்லீ இணையும் பான் இந்தியா படத்திற்காக சர்வதேச தரத்தில் சண்டைக் காட்சிகள் மற்றும் கிராஃபிக்ஸ் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களில் கிராஃபிக்ஸ் பணிகளை செய்த ஒரு பெரிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த படம் குறித்த ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இந்த பான் இந்திய திரைப்படத்திற்கு 20 வயது இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறார். இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சாய் அபயங்கர் இசையில் இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. எந்த நம்பிக்கையில் அல்லு அர்ஜுன் அவருக்கு இப்படி ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கொடுக்கிறார் என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன.
சாய் அபயங்கர் மீது நம்பிக்கை வைத்தது எப்படி?
சாய் அபயங்கர் திரைப்படங்களுக்கு இசை அமைப்பாளராக பணிபுரியவில்லை என்றாலும், பல சுயாதீன இசைப் பாடல்களுக்கு இசையமைத்து இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அவர் இசையமைத்த பாடல்கள் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றுள்ளன. திறமை இருந்தால் போதும், வயது மற்றும் அனுபவம் ஒரு தடையல்ல என்பதை சாய் நிரூபித்துள்ளதால் அவரை நம்பி பிரம்மாண்ட பட வாய்ப்பை கொடுத்துள்ளனர் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன்.
இதையும் படியுங்கள்... அல்லு அர்ஜூன், அட்லீ படத்திற்கு ரூ.800 கோடி பட்ஜெட்டா? சரி, சம்பளம் எவ்வளவு தெரியுமா?
யார் இந்த சாய் அபயங்கர்?
பிரபல பாடகர்கள் திப்பு, ஹரிணி தம்பதியரின் மகன் சாய் அபயங்கர். அதனால் தான் அல்லு அர்ஜுன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது என்று சிலர் கூறுகின்றனர். அபியங்கர் சில ஆல்பம் பாடல்களால் பிரபலமானார். அவர் இசையமைத்த 'கட்சி சேரா', 'ஆசா கூட' பாடல்கள் அனைவரையும் கவர்ந்தன. அந்த பாடல்கள் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன.
லோகேஷ் கனகராஜ் கதை எழுதிய பென்ஸ் படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார். இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியுடன் சூர்யா நடிக்கும் படத்திற்கும் அவரே இசை அமைப்பாளர். யூடியூப் பாடல்கள் மூலம் சாய் அபயங்கர் பெரிய ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் அல்லு அர்ஜுன் - அட்லீயின் பார்வை அவர் மீது விழுந்துள்ளது.
கம்மியான வயதில் பிரம்மாண்ட வாய்ப்பை தட்டிதூக்கிய சாய் அபயங்கர்
சிறு வயதிலேயே இசை அமைப்பாளராக வருவது அரிது. ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசை அமைப்பாளர்கள் 27 வயதிலேயே பெரிய படங்களில் பணியாற்ற வாய்ப்பு பெற்றனர். அனிருத் 23 வயதிலேயே பெரிய படத்தில் அறிமுகமானார். சாய் அபயங்கரின் தற்போதைய வயது 20. இந்த வயதிலேயே அல்லு அர்ஜுன், அட்லீ போன்ற ஸ்டார் கூட்டணியில் 800 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தை வாய்ப்பை பெற்றிருப்பது சாதாரண விஷயம் அல்ல.
அனிருத்திடம் பணியாற்றிய சாய்
சாய் அபயங்கர் 'ராக் ஸ்டார்' அனிருத்திடம் கூடுதல் இசை புரோகிராமராக சிறிது காலம் பணியாற்றினார். அவருடன் இணைந்து 'தேவரா', 'கூலி' போன்ற படங்களுக்கு புரோகிராமராக பணியாற்றி உள்ளார் சாய். அனிருத்திடம் பணியாற்றியது மட்டுமின்றி பாரம்பரியமாக அவரது பெற்றோர்களும் பேமஸ் ஆன பின்னணி பாடகர்கள் என்பதால் சிறுவயதிலிருந்தே அந்த துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கி இப்போது முன்னேறி வருகிறார் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வருகிறது. எது எப்படியோ 20 வயதிலேயே ஒரு பான் இந்தியா படத்திற்கு இசையமைப்பது ஒரு பெரிய விஷயம்.
இதையும் படியுங்கள்... மியூசிக் சென்சேஷனாக உருவெடுத்த சாய் அபயங்கர் - கைவசம் இத்தனை படங்களா?