ஒரே ஒரு பாடகரை மட்டும் பாட வைத்து ஒரு படத்தையே ஹிட்டாக்கிய இளையராஜா - அடடே இந்த படமா?

Published : Apr 13, 2025, 12:34 PM IST

இளையராஜா இசையமைத்த ஒரு படத்திற்காக ஒரே ஒரு ஆண் பாடகர் மட்டும் பாடி, அந்த பாடல்கள் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளன. அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.

PREV
15
ஒரே ஒரு பாடகரை மட்டும் பாட வைத்து ஒரு படத்தையே ஹிட்டாக்கிய இளையராஜா - அடடே இந்த படமா?

Malaysia Vasudevan Sing all songs of this Master piece Movie in Ilaiyaraaja Music :"அன்னக்கிளி" என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் தான் இளையராஜா. கடந்த 1976ம் ஆண்டு தனது இசைப்பயணத்தை தொடங்கிய இளையராஜா, கடந்த 49 ஆண்டுகளாக, இசையின் ராஜாவாக திகழ்ந்து வருகிறார். தற்போது அவருக்கு 82 வயது ஆன போதிலும் இசையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் இளையராஜா. அண்மையில் தன்னுடைய முதல் சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றி சரித்திரம் படைத்தார். இன்றளவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார் இளையராஜா.

25
Ilaiyaraaja Songs

இளையராஜாவுக்கு பிடிக்காத படம்

1980-களில் ஹீரோக்களுக்காக ஓடிய படங்களைக் காட்டிலும் இசைஞானி இளையராஜாவுக்காக ஓடிய படங்கள் தான் அதிகம். தயாரிப்பாளர்களே இளையராஜாவின் இசை என்றால் கதையே கேட்காமல் படத்தை எடுக்க சம்மதிப்பார்களாம். அந்த அளவுக்கு அவருக்கு மவுசு இருந்தது. இளையராஜாவின் இசைக்காகவே ஓடிய படங்களில் பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ படமும் ஒன்று. அப்படத்தை இயக்கி முடித்தபின், ரீ-ரெகார்டிங் செய்ய இளையராஜா பார்த்தபோது, அவருக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

35
Muthal mariyathai

இசையால் ஹிட் அடித்த முதல் மரியாதை

என்ன படம் எடுத்து வச்சிருக்க என பாரதிராஜாவை கூப்பிட்டு திட்டினாராம். படம் பிடிக்கவில்லை என்றால் இசையமைப்பது தன்னுடைய வேலை என்பதால் அதை திறம்பட செய்து முடித்தாராம் இளையராஜா. ஆனால் படத்தின் ரிசல்ட் இளையராஜா சொன்னதற்கு உல்டா ஆகிப்போனது. அதற்கு முக்கிய காரணம் ராஜாவின் இசைதான். ஒன்னுமே இல்லாத படத்திற்கும் உயிர்கொடுத்திருந்தது இளையராஜாவின் இசை. அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து தான் எழுதி இருந்தார்.

இதையும் படியுங்கள்... ராக்கம்மா கைய தட்டு பாடல் கம்போஸிங்கில் இளையராஜா செய்த மேஜிக்; மெர்சலான இசைக்கலைஞர்கள்!

45
Malaysia Vasudevan

ஒரே படத்தில் 4 பாடல் பாடிய மலேசியா வாசுதேவன்

இப்படத்தில் இளையராஜா மொத்தம் பயன்படுத்தியது மூன்று சிங்கர்ஸ் தான். அதில் ஒரு பாடகர் மற்ற இரண்டு பேர் பாடகிகள். முதல் மரியாதை படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் ஆண் குரலில் வரும் பாடல்கள் 6, அந்த 6 பாடல்களில் இரண்டு பாடல்களை இளையராஜா பாடிவிட்டார். எஞ்சியுள்ள நான்கு பாடல்களையும் மலேசியா வாசுதேவன் தான் பாடி இருந்தார். அதேபோல் இப்படத்தில் இடம்பெற்ற 7 பாடல்களில் ‘அந்த நிலாவத் தான் கையில புடிச்சேன்’ என்கிற பாடலை மட்டும் சின்னக்குயில் சித்ரா பாடியிருந்தார்.

55
Ilaiyaraaja, Janaki

முதல் மரியாதை பட பாடல் சீக்ரெட்

எஞ்சியுள்ள 6 பாடல்களில் 1 பாடல் இளையராஜா சோலோவாக பாடி இருந்தார். மீதமுள்ள ஐந்து பாடல்களையும் பாடகி ஜானகி பாடி இருந்தார். அதில் ‘ராசாவே உன்ன நம்பி’ என்கிற பாடலை மட்டும் சோலோவாக பாடி இருந்தார் ஜானகி, எஞ்சியுள்ள நான்கு பாடல்களையும் மலேசியா வாசுதேவன் உடன் இணைந்து பாடி இருந்தார். இந்த பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது மட்டுமின்றி காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்... இளையராஜாவுக்கு தில்ல பாத்தீங்களா! இதெல்லாம் அவர் வீரப்பன் ஏரியாவில் கம்போஸ் செய்த பாடல்களாம்

Read more Photos on
click me!

Recommended Stories