வீர தீர சூரனை விரட்டிவிட்ட குட் பேட் அக்லி; வசூலில் வாஷ் அவுட் ஆன விக்ரம் படம்!
விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வந்த வீர தீர சூரன் திரைப்படம், தற்போது குட் பேட் அக்லி படத்தால் வாஷ் அவுட் ஆகி இருக்கிறது.
விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வந்த வீர தீர சூரன் திரைப்படம், தற்போது குட் பேட் அக்லி படத்தால் வாஷ் அவுட் ஆகி இருக்கிறது.
Veera Dheera Sooran vs Good Bad Ugly : கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிக்கக் கூடிய நடிகர் என்றால் அது விக்ரம் தான். ஆனால் அவர் ரிஸ்க் எடுத்து நடிக்கும் படங்களைவிட பெரிதும் மெனக்கெடாமல் நடிக்கும் கமர்ஷியல் படங்களே விக்ரமுக்கு கைகொடுத்திருக்கின்றன. அண்மையில் அவர் ரிஸ்க் எடுத்து நடித்த கோப்ரா, தங்கலான் ஆகிய படங்கள் எல்லாம் தோல்வியை தான் தழுவின. ஆனால் பெரிதும் மெனக்கெடாமல் அவர் நடித்து கடந்த மாதம் திரைக்கு வந்த வீர தீர சூரன் நல்ல வரவேற்பை பெற்றது.
விக்ரமின் வீர தீர சூரன்
வீர தீர சூரன் திரைப்படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த மார்ச் 27ந் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். இப்படத்தை ரியா ஷிபு தயாரித்து இருந்தார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி நல்ல ஓப்பனிங்கை கொடுத்தது. நடிகர் விக்ரமுக்கு கம்பேக் படமாகவும் இது அமைந்தது.
இதையும் படியுங்கள்... 3 மாதத்தில் 60 பிளாப் படங்களா? கோலிவுட்டின் காலாண்டு ரிப்போர்ட் ஒரு பார்வை
வாஷ் அவுட் ஆன வீர தீர சூரன்
வீர தீர சூரன் போக போக பிக் அப் ஆனதால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூலை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு எண்டு கார்டு போட்டுள்ளது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம். ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆன அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருவதால், தற்போது வீர தீர சூரன் திரையிடப்பட்ட திரையரங்குகள் எல்லாம் குட் பேட் அக்லி திரைப்படம் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் வீர தீர சூரன் படம் வாஷ் அவுட் ஆகி உள்ளது.
வீர தீர சூரனுக்கு ஆப்பு வைத்த குட் பேட் அக்லி
வீர தீர சூரன் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அப்படம் 52 கோடி வசூலித்தது வரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்பின் கப்சிப் என ஆகிவிட்டது. 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வீர தீர சூரன் திரைப்படம் வெறும் 66 கோடி தான் வசூலித்துள்ளதாம். இதனால் இப்படம் பெரும் வெற்றியை பெறாமல், முதலுக்கு மோசமின்றி தப்பித்து இருக்கிறது. குட் பேட் அக்லி ரிலீஸ் ஆகாமல் இருந்திருந்தால் வீர தீர சூரன் கன்பார்ம் 100 கோடி வசூல் அள்ளி இருக்கும். தற்போது இரண்டே வாரத்தில் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டுள்ள அப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை தவறவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... டிராகன் சாதனையை முறியடித்த ரெட் டிராகன்; பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் குட் பேட் அக்லி!