தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி 2 தேசிய விருதுகளையும் வென்றது.
24
தற்போது தொடர்ந்து டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிசியான நடிகராக வலம் வரும் யோகிபாபு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் ஆண்குழந்தை பிறந்தது.
முருக பக்தரான யோகிபாபு, அந்த குழந்தைக்கு விசாகன் என பெயர் சூட்டினார். அந்த குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவை கடந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடி இருந்தார் யோகிபாபு. ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
44
இந்நிலையில், யோகிபாபு தனது மகன் விசாகனின் பிறந்தநாளை இன்று கொண்டாடி உள்ளார். குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேபோல் இயக்குனர் பார்த்திபன் மற்றும் நகைச்சுவை நடிகர் கணேஷ்கர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.