நடிகர் விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தியது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் என்பது அனைவரும் அறிந்ததே. தந்தையின் உதவியுடன் சினிமாவில் எண்ட்ரி ஆனாலும், பின்னர் தனது கடின உழைப்பால் முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
உலக மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், தனது மகன் நடித்துள்ள வாரிசு படம் வெற்றியடைவும் வேண்டி பிரார்த்தனை செய்த அவருக்கு சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஷோபா சந்திரசேகர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். குறிப்பாக விஜய் அரசியலுக்கு வாருவாரா என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.