பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சல்மான் கான். 57 வயதாகும் இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. 57 வயதிலும் முரட்டு சிங்கிளாக வலம் வந்தாலும், இவருடன் காதல் சர்ச்சைகளில் சிக்காத நடிகைகளே இல்லை என சொல்லும் அளவும், கத்ரீனா கைஃப் முதல் பூஜா ஹெக்டே வரை இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்நிலையில் நடிகர் சல்மான் கான் நேற்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அதன் புகைப்பட தொகுப்பை தற்போது பார்க்கலாம்.