அது எனது தந்தையின் 100-வது படம். அதற்காக ஆலந்தூரில் உள்ள சேட்டு ஒருவரிடம் எங்கள் தோட்டத்தின் பத்திரத்தை அடமானம் வைத்து ஒரு லட்சம் வாங்கி கொடுத்தார். நியாயப்படி பார்த்தால் அந்த ஒரு லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் வாசு தான் என் தந்தைக்கு கொடுக்க வேண்டும். ஆனால் எம்.ஜி.ஆர். அதை நான் தருகிறேன் என என் தந்தையிடம் சொல்லிவிட்டார். அது தான் என் தந்தைக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட காரணம்.
பணத்தை திருப்பி கொடுக்காமல் 3, 4 நாள் என் தந்தையை சுத்தவிட்டுள்ளார் எம்.ஜி.ஆர். என் தந்தை மிகவும் கோபக்காரர். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டதே கோபத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்பது தான். எம்.ஜி.ஆர். பணத்தை கொடுக்காமல் சுத்தவிட்ட கோபத்தில் தான் அவரை துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டார் என் தந்தை.