தமிழ் சினிமாவில் ஹீரோயின் இல்லாத படம் கூட வருகிறது, ஆனால் யோகிபாபு இல்லாத படமே இல்ல என சொல்லும் அளவுக்கு இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரிலீசான வண்ணம் உள்ளது. இதுதவிர கைவசம் 20 படங்களுக்கு மேல் வைத்திருக்கும் யோகிபாபு, அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவர் கெஸ்ட் ரோலில் நடித்த படங்கள் இவரது புகைப்படத்தை பயன்படுத்தி புரமோட் செய்வதற்கு யோகிபாபு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
24
அந்த வகையில் தற்போது தாதா என்கிற படக்குழு யோகிபாபுவின் போஸ்டரை பயன்படுத்தி புரமோட் செய்தனர். இதைப்பார்த்து டென்ஷன் ஆன யோகிபாபு தான் அந்த படத்தில் நடிக்கவே இல்லை எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் இன்று நடைபெற்ற அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு யோகிபாபு வர மறுத்ததற்கும், அவரது செயலை கண்டித்தும் அப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் பேசி இருந்தனர்.
இந்நிலையில், அதற்கு யோகிபாபு பதிலடி கொடுத்துள்ளார். நான் தாதா படத்தில் நடிக்கவில்லை. நான் நடித்த படம் மணி. அதனை எனக்கு தெரியாமலே மாற்றிவிட்டு பிரச்சனை பண்ணுகிறார்கள். நான் மணி படத்தில் தான் நடித்தேன். தாதா அப்படிங்குறது எனக்கு தெரியாது. அப்படி இருக்கும்போது ஏன் என் மூஞ்சிய போட்டு விநியோகஸ்தர்களை ஏமாத்துறீங்க என சாடியுள்ளார்.
44
மறுபுறம் யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்ககோரி தாதா படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தாதா படத்தை வியாபாரம் செய்ய விடாமல் தடுப்பதாகவும், அவரை தொடர்ந்து படங்களில் நடிக்க தடைவிதிக்க கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த விவகாரம் பூதாகரம் ஆகி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.