பொன்னியின் செல்வனுக்கு பின் எகிறிய மவுசு... சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய ஜெயம் ரவி - அதுவும் இத்தனை கோடியா?

First Published | Dec 4, 2022, 2:29 PM IST

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் அவர் சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி உள்ளதாகவும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக ரிலீசான படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கிய இந்த பிரம்மாண்ட படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார் ஜெயம் ரவி. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. இவர் கைவசம் அகிலன், இறைவன், சைரன் மற்றும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என செம்ம பிசியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் அகிலன் மற்றும் இறைவன் ஆகிய படங்களின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்... என்னை திமிரு பிடிச்சவன்னு சொல்றாங்க... அதற்கு காரணம் இதுதான் - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வடிவேலு

Tap to resize

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் அவரின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அவர் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக இருக்கும் அகிலன் திரைப்படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று, ரூ.30 கோடிக்கு வாங்கி உள்ளது. அவர் சோலோ ஹீரோவாக நடித்த படங்களில் அதிக தொகைக்கு விற்பனையான படம் இதுவாகும்.

அதுமட்டுமின்றி சம்பளத்தையும் கிடுகிடுவென உயர்த்தி உள்ளாராம் ஜெயம் ரவி. குறிப்பாக சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்ததற்காக ரூ.5 கோடி சம்பளமாக அவர் வாங்கியுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் வெற்றிதான் இந்த சம்பள உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... துணிவு - வாரிசு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் இல்லை.. முதலில் களமிறங்குவது யார்?- ஷாக்கிங் தகவலை வெளியிட்ட பிரபலம்

Latest Videos

click me!