ரெட் கார்டு கொடுக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது பிரச்சனையெல்லாம் முடிந்து மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார். இவர் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். வடிவேலு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை சுராஜ் இயக்கி உள்ளார்.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வடிவேலு. அதன்படி தான் ஒரு திமிரு பிடிச்சவன் என்று பலர் கூறி வருவதற்கான காரணத்தை வடிவேலு தெரிவித்துள்ளார். தன்னிடம் வந்து கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை பிடிக்கவில்லை என்றால் கால்ஷீட் கொடுக்க மாட்டேன்.
அப்படி நான் கால்ஷீட் கொடுக்காதவர்கள் தான் என்னப்பற்றி தவறாக பேசுகிறார்கள். வடிவேலும் ரொம்ப திமிரு, என்ன ஆட்டம் என்றெல்லாம் புரளியை கிளப்பிவிடுகிறார்கள். மக்கள் ரசிக்கனும், அதற்காக தான் நான் ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அது பிடிக்காதவர்கள் தான் பொறாமையில் இதுபோன்று பேசுகிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்னை ரசிக்கிறார்கள் அதுபோதும் எனக்கு” என தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் வடிவேலு.
இதையும் படியுங்கள்... துப்பாக்கி கவுண்டரின் வாழ்க்கை வரலாற்றை காப்பி அடித்து தான் RRR படம் எடுத்தாரா ராஜமவுலி?- கிளம்பிய புதுசர்ச்சை