வடிவேலுவை போல் யோகிபாபுவுக்கும் ரெட் கார்டா? - அவர் படங்களில் நடிக்க தடை கோரி பரபரப்பு புகார்

First Published | Dec 4, 2022, 3:40 PM IST

யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என தாதா படத்தின் இயக்குனர் கின்னஸ் கிஷோர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் தாதா. இப்படத்தில் நிதின் சத்யா உடன் இணைந்து நடித்துள்ளார் யோகிபாபு. இப்படத்தை கின்ன்ஸ் கிஷோர் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்தது. அதில் யோகிபாபுவின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதையடுத்து இந்த படத்தில் தான் 4 சீனில் தான் நடித்ததாகவும், தயவு செய்து தன்னை வைத்து விளம்பரம் செய்ய வேண்டாம் எனவும் டுவிட்டர் வாயிலாக தெரிவித்து இருந்தார் யோகிபாபு.

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வனுக்கு பின் எகிறிய மவுசு... சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய ஜெயம் ரவி - அதுவும் இத்தனை கோடியா?

Tap to resize

இந்நிலையில், யோகிபாபுவின் இந்த செயலுக்கு தாதா திரைப்படத்தின் இயக்குனர் கிஷோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் கின்னஸ் கிஷோர், யோகிபாபு திரைப்படத்தில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் என கூறினார்.

மேலும் அவர் பேசியதாவது : தாதா திரைப்படத்தில் நடிக்கவில்லை என யோகிபாபு டுவீட் செய்தாலும், அதுகுறித்து கவலையில்லை. தாதா படத்தை எந்த தயாரிப்பாளரும் வாங்கவிடாமல் தடுத்ததால், யோகிபாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக இயக்குனர் கிஷோர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தனது தயாரிப்பில் வேறு ஒரு படத்தில் நடிக்க யோகிபாபு அட்வான்ஸ் வாங்கி உள்ளதாகவும், ஆனால் நடித்து கொடுக்கவில்லை என்றும் தெரிவித்த கிஷோர், என்னுடையை படத்தை வியாபாரம் செய்ய விடாமல் தடுத்ததற்காக அவரை எந்த படத்திலும் நடிக்கவிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக கிஷோர் தெரிவித்துள்ளார். யோகிபாபு - தாதா படக்குழு இடையேயான பிரச்சனை கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.

இதையும் படியுங்கள்... என்னை திமிரு பிடிச்சவன்னு சொல்றாங்க... அதற்கு காரணம் இதுதான் - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வடிவேலு

Latest Videos

click me!