‘ஏ’ படம் பார்க்கப் போய் ஏடாகூடமாக சிக்கிய ஒய்.ஜி.மகேந்திரன்... எப்படியெல்லாம் வேஷம் போட்டிருக்கார் தெரியுமா?

First Published Oct 14, 2020, 7:54 PM IST

கொரோனாவால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், நாளை நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தியேட்டரில் படம் பார்த்த தனது அனுபவம் குறித்து நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பகிர்ந்துள்ள நினைவுகளை பார்க்கலாம்...

நடிகர் ஒய் ஜி மகேந்திரன் அதிக படங்களை விரும்பி பார்த்தது சாந்தி தியேட்டரில் தானாம். அவருடைய பரீட்சைக்கு நேரமாச்சு படத்தை சிவாஜி கணேசனோடு சேர்ந்து பால்கனியில் இருந்து பார்த்து ரசித்த சுவாரஸ்யமான நாட்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
undefined
அந்த காலத்தில் முழு நீள காமெடி படமாக வெளியான காதலிக்க நேரமில்லை படத்தை மட்டும் கசினோ தியேட்டரில் குறைந்தது 30 முறை பார்த்து ரசித்துள்ளாராம்.
undefined
பிராட்வேயில் இருக்கும் மினர்வாவும் மறக்க முடியாது. அதன் மேனேஜரும் என் அப்பாவுக்கு தெரிந்தவர். ஏ சான்று படங்களை பார்க்க சிறுவர்கள் வந்தால் விட மாட்டார்.
undefined
லாஸ்ட் டிரெய்ன் ஃப்ரம் கன் ஹில் படத்தை பார்க்க நானும், நண்பர்களும் முடிவு செய்தோம். அந்த படத்தில் பலாத்கார காட்சி இருந்ததால் ஏ சான்று கொடுத்திருந்தார்கள்.
undefined
ஆனால் நானும் எனது நண்பர்களும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக மீசை வரைந்து கொண்டு சென்றோம். அப்போது கூட தியேட்டர் மேனேஜர் எங்களை அடையாளம் கண்டு விரட்டிவிட்டார்.
undefined
ஒரு படத்தை ஓடிடியில் பார்ப்பதை விட தியேட்டரில் கூட்டமாக உட்கார்ந்து பார்க்கும் போது தான் நல்ல அனுபவத்தை கொடுக்கும் என தெரிவித்துள்ளார் ஒய் ஜி மகேந்திரன்.
undefined
click me!