சிம்புவை மணக்கிறாரா த்ரிஷா? டி. ராஜேந்தர் செயலால் அதிர்ச்சியான பத்திரிக்கையாளர்கள்!

First Published | Oct 14, 2020, 6:56 PM IST

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் சிம்பு.
 

குறிப்பாக இவருக்கு ஆண் ரசிகர்களை விட, ஒரு காலத்தில் பெண் ரசிகர்கள் அதிகமாகவே இருந்தனர்.
இவர் திரைப்படங்கள் வெளியாகி சில வருடங்கள் ஆனபோதிலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை.
Tap to resize

மேலும் தற்போது கேரளா சென்று உடல் எடையை குறைத்து வந்துள்ள சிம்பு, விரைவில் சுசீந்திரன் இயக்க உள்ள படத்திலும், மாநாடு படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனக்கு இஷ்டமான கோவில்களுக்கு சென்று வந்த பின் விரைவில் சுசீந்திரன் இயக்கும் கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் இன்று, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களை இன்று டி.ராஜேந்தர் சந்தித்தார்.
அப்போது நிருபர்கள் சிம்புவுக்கும் நடிகை திரிஷாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது குறித்து கேள்வி கேட்டபோது இந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த டி ராஜேந்தர் தண்ணீரை பருகியபடி அடுத்த கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.
இந்த தகவலில் உண்மை இல்லை என்றால், மறுத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் இவர் நடந்து கொண்ட விதம் பத்திரிகையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!