2025-ம் ஆண்டு அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகின. இதில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
2025-ம் ஆண்டு தற்போது தான் தொடங்கியது போல் உள்ளது. ஆனால் மின்னல் வேகத்தில் 11 மாதங்கள் சென்றுவிட்டன. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமா ரீகேப் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய ஹீரோக்கள் யார்.. யார்? அவர்கள் எத்தனை கோடி சம்பளம் வாங்கினார்கள் என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
24
அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் விக்ரம் உள்ளார். அவர் வீர தீர சூரன் படத்திற்காக 30 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். அடுத்ததாக சிம்பு, சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோர் 4ம் இடத்தை பிடித்துள்ளனர். இதில் சிம்பு தக் லைஃப் படத்திலும், சிவகார்த்திகேயன் மதராஸி படத்திலும், சூர்யா ரெட்ரோ படத்திலும் நடித்திருந்தார். இவர்கள் மூவருமே 40 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்கள். இந்த மூன்று படங்களில் தக் லைஃப் படம் படுதோல்வியை சந்தித்தது. மதராஸி மற்றும் ரெட்ரோ ஆகிய படங்கள் முதலுக்கு மோசமின்றி தப்பித்தன. இந்த ஆண்டு இந்த மூன்று நடிகர்களுக்குமே சுமாரான ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
34
ஹாட்ரிக் ஹிட் அடித்த தனுஷின் சம்பளம் எவ்வளவு?
இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் 3ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு மூன்று படங்கள் வெளியானது. மூன்றுமே பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதில் ஒன்று இட்லி கடை என்கிற தமிழ் படம், மற்றொன்று குபேரா என்கிற தெலுங்கு படம், மூன்றாவது தேரே இஷ்க் மே என்கிற இந்தி படம். இந்த மூன்று படங்களுக்காக அவர் வாங்கிய ஒட்டுமொத்த சம்பளம் ரூ,85 கோடியாம். இதில் அதிகபட்சமாக இட்லி கடை படத்துக்கு 40 கோடி சம்பளம் வாங்கிய தனுஷ், குபேராவில் நடிக்க ரூ.30 கோடி சம்பளம் பெற்றிருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக தேரே இஷ்க் மே படத்திற்கு வெறும் 15 கோடி சம்பளம் வாங்கி நடித்துள்ளார் தனுஷ்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய அப்படத்திற்காக ரூ.200 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார் ரஜினி. இருப்பினும் 15 கோடி வித்தியாசத்தில் ரஜினியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் அஜித் குமார். அவர் நடிப்பில் இந்த ஆண்டு குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் விடாமுயற்சி படத்திற்காக ரூ.105 கோடி சம்பளம் வாங்கிய அஜித், குட் பேட் அக்லிக்காக ரூ.110 கோடி வாங்கினார். ஆகமொத்தம் இந்த ஆண்டில் மட்டும் அவர் 215 கோடி சம்பளமாக பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.