மாஸ் ஸ்கெட்ச்! இனி தோல்வியே இல்லை! சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்டு உறுதி: அதிரடித் திட்டம் என்ன?

Published : Dec 11, 2025, 03:00 PM IST

Suriya Hat Trick Hit Plan With Upcoming Movies : கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூர்யாவிற்கு 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு புதுவிதமான ஆண்டாக அமைந்து நடிக்கும் 3 படங்களும் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
17
கங்குவா விமர்சனம்

கங்குவா மற்றும் ரெட்ரோ என்று அடுத்தடுத்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நடிகர் சூர்யா இப்போது ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிப்பில் கடந்த 2024 நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் கங்குவா. இந்தப் படம் வெளியானது முதலே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

27
ரூ.350 கோடி பட்ஜெட் ரூ.100 கோடி கலெக்‌ஷன்

கிட்டத்தட்ட ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் பட்ஜெட்டில் பாதி கூட வசூல் குவிக்கவில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்தப் படத்திற்கு பிறகு வெளியான ரெட்ரோ படமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த நிலையில் தான் இப்போது அடுத்தடுத்து 3 படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த கருப்பு படமும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

37
கருப்பு அப்டேட்

படத்தில் இடம் பெற்ற God Mode என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்றது. முழுக்க முழுக்க ஆன்மீகம் மற்றும் ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி உருவாகும் சூர்யா கருப்பு மற்றும் சரவணன் என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், சூர்யா உடன் இணைந்து த்ரிஷா, நட்டி என்ற நடராஜன், சுவாஷிகா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஆர் ஜே பாலாஜி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

47
சூர்யா 45 : கருப்பு அப்டேட்

இது சூர்யாவின் 45ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்போது இவருடைய பாடல் தான் பட்டி தொட்டியெங்கும் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

57
சூர்யா 46 அப்டேட்

கருப்பு படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வரும் 2026ஆம், ஆண்டு இறுதிக்குள் கருப்பு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று சூர்யா அடுத்தடுத்து சூர்யா 46 மற்றும் சூர்யா 47 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யா உடன் இணைந்து மமிதா பைஜூ, ரவீனா தண்டன், ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஜி வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதற்கு முன்னதாக சூர்யா மற்றும் ஜிவி பிரகாஷ் காம்போவில் சூரரைப் போற்று படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

67
சூர்யா 47 அப்டேட்

கருப்பு மற்றும் சூர்யா 46 ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா மற்றொரு படத்திலும் பிஸியாக நடிக்கத் தொடங்கியுள்ளார். ஆம், சூர்யா 47 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஆவேசம் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் படைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா நசீம் இந்தப் படத்தின் மூலமாக தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். இந்தப் படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், சூர்யா இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

77
ஒரே நேரத்தில் 3 படம்; ஹாட்ரிக் ஹிட் கொடுக்க பிளான்

இப்படி ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வரும் சூர்யாவிற்கு வரும் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு புதுவிதமான ஆண்டாக அமைய போகிறது. 3 படங்களையும் ஹிட் கொடுத்து ஒரே ஆண்டில் ஹாட்ரிக் ஹிட் கொடுத்த நடிகர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories