ரேஸில் இருந்து விலகிய வா வாத்தியார், லாக்டவுன்... டிசம்பர் 12 தியேட்டர் & OTT-ல் இத்தனை படங்கள் ரிலீஸா?

Published : Dec 11, 2025, 02:03 PM IST

டிசம்பர் 12-ந் தேதி கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் அதற்கு பதிலாக ஏராளமான படங்கள் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன அதைப்பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

PREV
14
Theatre and OTT Release Movies on December 12

டிசம்பர் மாதம் தமிழ் சினிமாவுக்கு ஆரம்பம் முதலே முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இம்மாதத்தின் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆக இருந்த அனுபமா பரமேஸ்வரனின் லாக்டவுன் திரைப்படம் கடைசி நேரத்தில் மழை காரணமாக அப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 12-ந் தேதி லாக்டவுன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடித்த இப்படம், ரிலீசுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது அதன் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு திடீரென அறிவித்துள்ளது. இதனால் லாக்டவுன் படம் டிசம்பர் 12ந் தேதியும் ரிலீஸ் ஆகாது.

24
வா வாத்தியார் படமும் ரிலீஸ் ஆகாது

லாக்டவுனை போல் டிசம்பர் 12-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட மற்றொரு திரைப்படம் வா வாத்தியார். நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை ரிலீஸ் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் இப்படம் டிசம்பர் 12-ந் தேதி ரிலீஸ் ஆகாது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

34
டிசம்பர் 12ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?

லாக்டவுன் மற்றும் வா வாத்தியார் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகாவிட்டாலும் டிசம்பர் 12-ந் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவர் நடித்த படையப்பா படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதனுடன் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் மகாசேனா திரைப்படம் திரைக்கு வர உள்ளது. புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி உள்ள ‘யாரு போட்ட கோடு’ என்கிற திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் மாண்புமிகு பறை, வெற்றிக்கு ஒருவன் போன்ற சிறு பட்ஜெட் படங்களும் நாளை ரிலீஸ் ஆகிறது. பாலய்யாவின் அகண்டா 2 தாண்டவம் படமும் நாளை திரைக்கு வருகிறது.

44
டிசம்பர் 12ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன?

ஓடிடியில் இந்த வாரம் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி நடிப்பில் உருவான காந்தா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் டிசம்பர் 12-ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதனுடன் ஹர்ஷத் கான் மற்றும் கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆரோமலே திரைப்படமும் ஓடிடிக்கு வருகிறது. இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதுதவிர சிங்கிள் பாப்பா என்கிற வெப் தொடரும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 12ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories