திரைப்படங்களை தர மதிப்பீடு செய்யும் தளமான ஐஎம்டிபி 2025-ம் ஆண்டு இந்தியாவில் ரிலீஸ் ஆன படங்களில் டாப் 10 பாப்புலர் ஆன படங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதை பார்க்கலாம்.
ஐஎம்டிபி (IMDB) இந்த ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 10 பிரபலமான படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அறிமுக நடிகர்களான அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா நடிப்பில், மோஹித் சூரி இயக்கிய 'சையாரா' இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஒரு மியூசிக்கல் ரொமான்டிக் டிராமாவான இந்தப் படம் ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்திய சினிமா வரலாற்றில் ஒரு காதல் படம் பெற்ற அதிகபட்ச வசூல் இதுவாகும். பிரபல வர்த்தக ஆய்வாளரான சாக்னில்க் அறிக்கையின்படி, இப்படம் உலகளவில் ரூ.569.75 கோடி வசூலித்துள்ளது.
24
லிஸ்டில் இடம்பெற்ற 2 தமிழ் படங்கள்
மகாவதார் நரசிம்மா என்கிற அனிமேஷன் ஆன்மிக திரைப்படம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ராஷ்மிகா மந்தனா, விக்கி கெளஷல் நடித்த சாவா, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா அத்தியாயம் 1: எ லெஜண்ட் ஆகிய படங்கள் மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய ரஜினிகாந்த் படமான கூலி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் ஆறாவது இடம் மற்றொரு தமிழ் படமான டிராகனுக்கு கிடைத்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடித்த இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார்.
34
லோகாவுக்கு கடைசி இடம்
அடுத்த மூன்று இடங்களையும் இந்திப்படங்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. அமீர்கான் நடித்த சிதாரே ஜமீன் பர், பூஜா ஹெக்டேவின் தேவா, அஜய் தேவ்கன் நடித்த ரெய்டு 2 ஆகிய படங்கள் தான் 7, 8 மற்றும் 9-வது இடத்தை பிடித்துள்ளன. ஐஎம்டிபி பட்டியலில் இடம்பிடித்த ஒரே மலையாளப் படம், டொமினிக் அருண் இயக்கிய 'லோகா அத்தியாயம் 1: சந்திரா'. பிரபலமான படங்களின் பட்டியலில் இந்தப் படம் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. மலையாளத்தில் இண்டஸ்ட்ரி ஹிட்டான இப்படம், ஓடிடியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.