2025-ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2025-ல் தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த படங்கள் எவை என்பதைப் பற்றியும் அதன் வசூல் நிலவரத்தையும் இந்த தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.
ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' 2025-ல் அதிக வசூல் செய்த தென்னிந்தியப் படங்களின் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. ஆனால், இது பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. 300 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெறும் 195.8 கோடி மட்டுமே வசூலித்தது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்தார்.
210
9. துடரும்
மோகன்லாலின் 'துடரும்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.235.1 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த ஆண்டில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய இரண்டாவது படமாக துடரும் அமைந்துள்ளது.
310
8. குட் பேட் அக்லி
அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' படமும் 2025-ல் பட்டையைக் கிளப்பியது. 180 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 248.1 கோடி வசூலித்து ஹிட் ஆனது. இப்படம் அதிக வசூல் அள்ளிய தென்னிந்திய படங்கள் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.
வெங்கடேஷின் 'சங்கராந்திக்கு வஸ்துன்னாம்' இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி அதிக வசூலைப் பெற்றது. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 258.4 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஆனது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி செளத்ரி ஆகியோர் ஹீரோயினாக நடித்திருந்தனர்.
510
6. எம்புரான்
மோகன்லால் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரனின் 'L2: எம்புரான்' திரைப்படம் 2025-ல் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 268.1 கோடி வசூலித்து ஹிட் ஆனது. இது மோகன்லால் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்ததோடு இந்த பட்டியலில் 6-ம் இடத்தை பிடித்துள்ளது.
610
5. ஓஜி
பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 'தே கால் ஹிம் ஓஜி' படமும் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் உள்ளது. 240 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 298.1 கோடி வசூலித்து ஹிட் ஆனது. பவன் கல்யாணுக்கு தரமான கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்திருந்தார்.
710
4. லோகா
கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா சாப்டர் 1' திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. 40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 302.1 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆனது. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்து இருந்தார். டொமினிக் அருண் இப்படத்தை இயக்கி இருந்தார்.
810
3. மகாவதார் நரசிம்மா
'மகாவதார் நரசிம்மா' திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 2025-ல் வெளியான இந்த அனிமேஷன் திரைப்படத்தின் பட்ஜெட் 40 கோடி. இது 326.1 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஆனது. இப்படம் இந்த பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.
910
2. கூலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் 2025-ல் அதிக வசூல் செய்த இரண்டாவது தென்னிந்தியப் படமாகும். 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.516.7 கோடி வசூலித்தது. படம் சராசரியாக அமைந்தது.
1010
1. காந்தாரா சாப்டர் 1
பான் இந்தியா ஸ்டார் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம், 2025-ல் அதிக வசூல் செய்த தென்னிந்தியப் படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 130 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், பாக்ஸ் ஆபிஸில் 853.4 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆனது. இப்படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.