KGF 2 Review : மீண்டும் மாஸ் காட்டினாரா ராக்கி பாய்?... கே.ஜி.எஃப் 2 படத்தின் முதல் விமர்சனம் வெளியானது

Published : Apr 10, 2022, 12:33 PM IST

KGF 2 Review : இங்கிலாந்து மற்றும் துபாய் நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினராக இருக்கும் உமர் சந்து என்பவர் கே.ஜி.எஃப் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். 

PREV
14
KGF 2 Review : மீண்டும் மாஸ் காட்டினாரா ராக்கி பாய்?... கே.ஜி.எஃப் 2 படத்தின் முதல் விமர்சனம் வெளியானது

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் கே.ஜி.எஃப் 2. இப்படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

24

வருகிற ஏப்ரல் 14-ந் தேதி கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் விமர்சனம் வெளியாகி உள்ளது. உமர் சந்து என்பவர் கே.ஜி.எஃப் 2 படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இவர் இங்கிலாந்து மற்றும் துபாய் நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினராக உள்ளார்.

34

அவர் கூறியிருப்பதாவது: “கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கன்னட திரையுலகுக்கு மகுடம் சூடும் படமாக இருக்கும். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், சஸ்பென்ஸ் மற்றும் திரில் நிறைந்ததாக உள்ளது. வசனங்கள் அனைத்தும் வலிமையாக உள்ளது. பாடல்கள் ஓகே ரகம் தான், ஆனால் பின்னணி இசை வேறலெவலில் இருக்கிறது.

44

படம் பிரமாதமாக உள்ளது. இறுதி வரை படத்தின் தீவிரத்தை இயக்குனர் உணர வைத்துள்ள விதம் சிறப்பு. அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். கே.ஜி.எஃப் 2 உலகத்தரம் மிக்க படம். படத்தின் நாயகன் யாஷ் மற்றும் வில்லன் சஞ்சய் தத் திறம்பட நடித்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் உங்களை அதிர்ச்சியடைய வைக்கும்” என தெரிவித்துள்ள அவர், இப்படத்துக்கு 5 ஸ்டார்களையும் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... Beast : பீஸ்ட்டை போல் வெளிநாடுகளில் தடைவிதிக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ..!

Read more Photos on
click me!

Recommended Stories