பான்-இந்தியா சூப்பர் ஸ்டார் நடிகர் யஷ்ஷின் குடும்பம் எதிர்பாராத விதமாக ஒரு மோசடி புகாரில் சிக்கியுள்ளது. யஷ்ஷின் தாய் புஷ்பா ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படம் தயாரித்து வரும் நிலையில், விளம்பரப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஒரு பி.ஆர்.ஓ (PRO) மீது அவர் ரூ.65 லட்சம் மோசடி செய்ததாகப் புகார் அளித்துள்ளார்.
25
பி.ஆர்.ஓ மீது யஷ் தாய் வழக்குப்பதிவு
மீண்டும் பணம் தரவில்லை என்றால், படம் வெளியாகும் நேரத்தில் நெகட்டிவ் பப்ளிசிட்டி (Negative Publicity) செய்து படத்தை தோல்வியடையச் செய்வேன் என்று ஹரிஷ் மிரட்டியதாகப் புகாரில் புஷ்பா தெரிவித்துள்ளார்.
35
ரூ.65 லட்சம் மோசடி
"தனக்கு பல ஊடகங்கள் தெரியும், ரிலீஸ் நேரத்தில் படத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன்" என்று ஹரிஷ் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தச் சர்ச்சையில் ஹரிஷுடன் மேலும் இருவர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் படத்தின் இயக்குநரையும் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
45
Yash தாயை மிரட்டிய பி.ஆர்.ஓ
இதையடுத்து யாஷின் தாயார் புஷ்பா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், புஷ்பா பி.ஆர். சங்கம் (PR Association) மற்றும் கன்னட திரைப்பட வர்த்தக சபையிலும் (Kannada Film Chamber) புகார் அளித்துள்ளார்.
55
இயக்குநருக்கும் மிரட்டல்
பொதுவாக, 'கே.ஜி.எஃப்' படப் புகழ் யாஷ் சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பவர். 'டாக்ஸிக்' மற்றும் 'ராமாயணம்' போன்ற பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் நடிப்பதற்குத் தயாராகி வரும் நிலையில், அவரது குடும்பம் இந்த எதிர்பாராத சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது.