குடும்பத்தினரோடு ஆதரவற்றோர் இல்லத்தில் அருண் விஜய் கொண்டாடிய பிறந்தநாள்; குவியும் வாழ்த்து!

Published : Nov 19, 2025, 08:11 PM IST

Arun Vijay Celebrates Birthday at an Orphanage: நடிகர் அருண் விஜய் தன்னுடைய பிறந்தநாளை சமூக நோக்கத்துடன், ஆதரவற்றோர் இல்லத்தில், எளிமையாக கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

PREV
16
நடிகர் அருண் விஜய்:

தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சி, கட்டுக்கோப்பான நடிப்பு, ஸ்டைலான திரைபட தோற்றம் ஆகியவற்றின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி உள்ளவர் தான் நடிகர் அருண் விஜய். இவர் இன்று தனது பிறந்தநாளை சமூகப்பணி மூலம் கொண்டாடி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். ரசிகர்களும் அருண் விஜய்க்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

26
முக்கிய நாள்:

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு படத்திலும் தன்னை புதிதாக நிரூபிக்கும் அருண் விஜய், தனது வாழ்க்கையின் முக்கிய நாளை ஆதரவற்றோருடன் பகிர்ந்து கொள்வதை கடந்த சில வருடங்களாக பின்பற்றி வருகிறார்.

36
உதவும் கரங்கள்’ இல்லத்தில் பிறந்தநாள்:

அந்த வகையில் இந்த ஆண்டும், ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் தன்னுடைய பிறந்தநாளை, கொண்டாடியுள்ளார். இன்று காலை, தன்னுடைய குடும்பத்துடன் சென்னை அருகே செயல்படும் ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்திற்கு தனது குடும்பத்துடன் சென்று, அங்குள்ள குழந்தைகள் மற்றும் முதியோருடன் நேரம் செலவழித்த அருண் விஜய்.... அங்கு உள்ள குழந்தைகளுடன் விளையாடியும், படிப்புபற்றி பேசினார்.

46
சமூகம் குறித்த பொறுப்பு:

பின்னர் முதியவர்களிடம் அவர்களின் உடல்நிலை, தேவைகள், தினசரி வாழ்க்கை சவால்கள் குறித்து கேட்டறிந்து, தேவையான உதவிகளை செய்வதாக உறுதியும் அளித்தார். குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவருந்திய இந்த காட்சி, அங்கு இருந்தவர்களின் மனதைக் கவர்ந்தது. பிறந்தநாள் எப்போதும் போல் ஒரு சாதாரண நாளாக கடந்து விடாமல், இது சமூகம் குறித்த பொறுப்பு உணர்வை வெளிப்படுத்தும் ஒரு நாளாக மாறியது. சமூக வலைதளங்களில் இந்த உடனடி மனிதநேய வீடியோக்கள் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளன.

56
உண்மையான சந்தோஷம்:

பின்னர் அனைவருடனும் பேசிய அருண் விஜய், “சினிமா எனக்கு வாழ்க்கை. ஆனால், இந்த குழந்தைகளுடன் செலவிடும் சில நிமிடங்கள் தான் மனசுக்கு உண்மையான சந்தோஷம். என் பிறந்தநாள் என்றால் அவர்கள் சிரிப்பை காண்பதே எனக்கு பெரிய பரிசு.” என கூறி நெஞ்சங்களை நெகிழ வைத்தார். மேலும் இவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

66
அடுத்து வெளியாகும் திரைப்படங்கள்:

அருண் விஜய் தற்போது இன்னும் பெயரிடப்படாத தன்னுடைய 34-ஆவது படத்தில் நடித்து வருகிறார், இதை தவிர 'பீரங்கிக் கோட்டை' என்கிற ஹிஸ்டரிகள் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories