Manya Anand Shuts Down Misleading Reports on Dhanush Manager: தனுஷின் மேலாளர் என்கிற போர்வையில் தன்னை தொடர்பு கொண்ட நபர், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியதாக மான்யா ஆனந்த் கூறிய நிலையில், தற்போது இதுகுறித்து விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
சின்னத்திரையில் கவனம் பெறும் நடிகைகளில் ஒருவராக உள்ளார் மான்யா ஆனந்த். சன் டிவியில் ஒளிபரப்பான ‘வானத்தை போல’, ‘அன்னம்’ போன்ற தமிழ் சீரியல்களில் நடித்த இவருக்கு , ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது அனைவரும் தெரிந்ததே. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் இதில் தனுஷின் மேலாளர் பெயரும் சிக்கியது தான்.
27
தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ்:
மான்யா ஆனந்த் கொடுத்த பேட்டியில், “தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் என்கிற பெயரில் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு தவறாக பேசினார்” என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு உடனே அவர் சேர்த்த முக்கியமான வரி, “அவர் உண்மையில் தனுஷின் மேலாளரா அல்லது போலி நபரா என எனக்கு தெரியவில்லை” என்பது. இந்த தகவல் பல யூடியூப் சேனல்கள், மற்றும் சமூக வலைதள பக்கங்களில் காட்டு தீ போல் பரவியது.
37
கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர்:
இதனால் சில மணி நேரங்களிலேயே தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஸ்ரேயாஸ் இருவரும் வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினர். இருவரையும் குறைசொல்லும் வகையிலான பதிவுகள் பரவ துவங்கின. உண்மையான விவரம் வெளிவராமல், வெறும் திரித்த தலைப்புகளைக் கொண்டு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பரப்புவது சரியல்ல என ரசிகர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து வந்ததையும் பார்க்க முடிந்தது.
47
மான்யா விளக்கத்தை கொடுத்துள்ளார்:
தன்னுடைய பேட்டி தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை கவனித்த மான்யா ஆனந்த், உடனே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், “என்னைப் பற்றிய பேட்டியைத் தொடர்ந்து சில சேனல்கள் தனுஷ் சாரை குறைசொல்லும் விதமாக போலித் தகவல்களை பரப்பு வருகிறார்கள். நான் பேட்டியில் தெளிவாக ‘என்னை தொடர்பு கொண்ட நபர் ஒரு போலி நபராக இருக்கலாம்’ என்று சொல்லியிருந்தேன். நான் ஒருபோதும் ‘அவர் தனுஷின் அதிகாரப்பூர்வ மேலாளர்’ என்று கூறவில்லை” என்று வலியுறுத்தினார்.
57
தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்:
அவரது விளக்கத்தில் மேலும், “என்னை அழைத்த நபரின் எண்ணை தனுஷ் சாரின் குழுவுடன் பகிர்ந்து அவர்களுக்கு நன்கு தெரியப்படுத்துவேன். அவர் பெயரை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யக்கூடிய வாய்ப்பும் உள்ளது. எனவே, தயவுசெய்து யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். உண்மை தெரியாமல் யாரையும் குறைசொல்லுவது தவறு” என்று குறிப்பிட்டிருந்தார்.
67
போலி நபர்:
மான்யாவின் இந்த விளக்கம் வெளியானதும், சமூக ஊடகங்களில் பரவியிருந்த தவறான குற்றச்சாட்டுகள் படிப்படியாக குறைந்தன. தனுஷின் ரசிகர்களும், டிவி ரசிகர்களும் மான்யாவின் நேர்மையான விளக்கத்துக்கு பாராட்டுகள் தெரிவித்து வந்தாலும், ஒரு தரப்பினர் மான்யா இதை ஏன் முன்பே விளக்கமாக பேசவில்லை என ஆதங்கத்தையும் கொட்டி வருகிறார்கள். இதற்கிடையில், தனுஷ் தரப்பில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்தும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் அவரது மேலாளர் ஸ்ரேயாஸின் பெயருக்கு எதிராக பரவிய தவறான தகவல்கள் குறித்து பலரும் வருத்தம் தெரிவித்துள்ளார். யாரேனும் புகழ்பெற்ற நபரின் பெயரை பயன்படுத்தி மோசடிகள் செய்வது தற்போது சமூக ஊடகங்களில் புதுசல்ல என்பதால், மான்யா கூறிய “போலி நபர்” சந்தேகமும் ரசிகர்களை சற்றே சிந்திக்க வைத்துள்ளது.
77
சர்ச்சைக்கு ஃபுல் ஸ்டாப்:
இந்தச் சம்பவம், ஒரு பேட்டியில் சொன்ன ஒரு வரியை திரித்துக் கொண்டு எவ்வளவு பெரிய சர்ச்சையை உருவாக்கலாம் என்பதற்கான இன்னொரு உதாரணமாகவே பார்க்கப்படுகிறது. மான்யா ஆனந்த் நேரடியாக விளக்கமளித்ததால், unnecessary misunderstandings தவிர்க்கப்பட்டன. நடிகை வழங்கிய தெளிவான தகவல் பலரையும் அமைதிப்படுத்தியதை பார்த்த ரசிகர்கள், “இது போலியான குற்றச்சாட்டுக்கு ஒரு இறுதி Full Stop” என்று கூறிவருகின்றனர்.