KGF 3 Story : சுறா விஜய் பாணியில் தப்பித்தாரா ராக்கி பாய்?... இணையத்தில் தீயாய் பரவும் ‘கே.ஜி.எஃப் 3’ படக் கதை

Published : Apr 27, 2022, 11:59 AM IST

KGF 3 Story : கே.ஜி.எஃப் 3 பான் வேர்ல்டு படமாக இருக்கும் என்றும், இப்படத்தை முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

PREV
15
KGF 3 Story : சுறா விஜய் பாணியில் தப்பித்தாரா ராக்கி பாய்?... இணையத்தில் தீயாய் பரவும் ‘கே.ஜி.எஃப் 3’ படக் கதை

யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இப்படத்தை தொடர்ந்து அப்படத்தின் 2-ம் பாகத்தை பிரம்மாண்டமாக உருவாக்கிய படக்குழு அண்மையில் வெளியிட்டனர். விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக வெளியான இப்படம் உலகமெங்கும் அமோக வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

25

கே.ஜி.எஃப் 2 படத்தின் இறுதியில் இப்படத்தின் 3-ம் பாகம் உருவாக உள்ளதற்கான அறிவிப்பும் இடம்பெற்று இருந்தது. இதனால் மிகுந்த உற்சாகம் அடைந்த ரசிகர்கள், கே.ஜி.எஃப் 3-ம் பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என யூகிக்க தொடங்கி உள்ளனர். கே.ஜி.எஃப் 2-ம் பாக இறுதியில் ராக்கி பாய் தங்கங்களுடன் கடலில் மூழ்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

35

இதையடுத்து அவர் எப்படி தப்பித்தார் என்பது குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. சிலர் அதனை சுறா பட விஜய்யோடு ஒப்பிட்டு மீம் போட்டும் கலாய்த்திருந்தனர். சுறா படத்தின் அறிமுக காட்சியில் நடிகர் விஜய் கடலில் இருந்து நீச்சலடித்து வருவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும், அதேபோல் ராக்கி பாயும் வருவார் என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

45

ஒரு சிலர் இவ்வாறு மீம் போட்டு கலாய்த்தாலும், பெரும்பாலும் பகிரப்படும் தகவல் என்னவென்றால், இந்தியாவை பொறுத்தவரை ராக்கி பாய் இறந்துபோனதாக இருந்தாலும், அவர் இந்தோனேசியா மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் நீர்மூழ்கி கப்பலில் தப்பித்து, உலகளவில் தனது பிசினஸை நடத்துவது போன்ற காட்சிகள் கே.ஜி.எஃப் 3 படத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

55

கே.ஜி.எஃப் 3 பான் வேர்ல்டு படமாக இருக்கும் என்றும், இப்படத்தை முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... vijay First salary : இன்று 100 கோடிக்கு மேல் வாங்கினாலும்... விஜய்யின் முதல் சம்பளம் இவ்வளவு தான் - SAC தகவல்

Read more Photos on
click me!

Recommended Stories