Yash's Toxic Movie Release Date : கேஜிஎஃப் திரைப்படத்திற்குப் பிறகு யாஷ் நடிக்கும் திரைப்படம் 'டாக்சிக்'. "டாக்சிக்" ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு படமாக்கப்படும் முதல் பெரிய பட்ஜெட் இந்தியத் திரைப்படமாக இருக்கும் என்று முன்னதாக செய்திகள் வந்தன. தற்போது படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
2026 மார்ச் 19ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, டாக்சிக் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நாடு தழுவிய விளம்பர சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யாஷ் இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள ரசிகர்களுடன் உரையாடுவார் என்று கூறப்படுகிறது.