'யாரடி நீ மோகினி' என்கிற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை நக்ஷத்திரா, சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' என்கிற சீரியலில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் அமைதியான மற்றும் பொறுப்பான மனைவி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் ஈர்த்த நக்ஷத்திரா, இந்த சீரியலை தொடர்ந்து, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வள்ளி திருமணம்' என்கிற சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தினார்.
இவர் நடித்து வந்த 'வள்ளி திருமணம்' சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து, இவர் கர்ப்பமாக உள்ளதால் சில நாட்கள் மற்ற எந்த சீரியலிலும் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நக்ஷத்திரா தரப்பில் இருந்து, எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும்... இவருடைய தோழிகள் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து இவரை, இவரது வீட்டிற்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து, தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியாகவே ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.