கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி தமிழ் சினிமாவில் விஷாலின் லத்தி மற்றும் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் லத்தி படத்துக்கு அதிகபட்சமாக 400-க்கும் மேற்பட்ட திரைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதேபோல் நயன்தாராவின் கனெக்ட் படத்துக்கு 300-க்கும் அதிகமான ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டன.
24
இதில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படத்தை புதுமுக இயக்குனர் வினோத் இயக்கி இருந்தார். இப்படத்தை விஷாலின் நண்பர்களான நந்தாவும், ரமணாவும் இணைந்து தயாரித்து இருந்தனர். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்திற்கு பீட்டர் ஹெயின் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்து இருந்தார்.
அதேபோல் நயன்தாராவின் கனெக்ட் படத்தை அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார், இவர் ஏற்கனவே கேம் ஓவர், மாயா போன்ற திரில்லர் படங்களை இயக்கியவர் ஆவார். இப்படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சத்யராஜ், வினய் ராய் மற்றும் பாலிவுட் நடிகர் அனுபம்கேர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
44
இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக சற்று சறுக்கலை சந்தித்து இருந்தன. இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விஷாலின் லத்தி திரைப்படம் உலகளவில் ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இதில் தமிழ் நாட்டில் மட்டும் இப்படம் ரூ.1.25 கோடி வசூல் ஈட்டி உள்ளது. இதோடு ஒப்பிடும் போது கனெக்ட் படத்தின் வசூல் குறைவு தான். இப்படம் வெறும் ரூ.1 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.