அட.. துணிவு படத்துல இந்த பிக்பாஸ் சீசன் 6 பிரபலமும் நடிச்சிருக்காராம்பா- எச்.வினோத் வெளியிட்ட வேறலெவல் அப்டேட்

Published : Dec 23, 2022, 12:11 PM IST

துணிவு படத்தில் பாவனி, அமீர், மமதி சாரி, சிபி சந்திரன் போன்ற பிக்பாஸ் பிரபலங்கள் தவிர தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆன ஒருவரும் நடித்துள்ளதாக இயக்குனர் எச்.வினோத் கூறி உள்ளார்.

PREV
14
அட.. துணிவு படத்துல இந்த பிக்பாஸ் சீசன் 6 பிரபலமும் நடிச்சிருக்காராம்பா- எச்.வினோத் வெளியிட்ட வேறலெவல் அப்டேட்

துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அஜித் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் நடித்துள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும் அஜித்தின் டீம் மேட் ஆக நடித்துள்ளதாக இயக்குனரே ஒரு பேட்டியில் விளக்கம் அளித்தார்.

24

துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இவரது இசையில் இதுவரை சில்லா சில்லா மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக கேங்ஸ்டா என்கிற பாடலை வருகிற டிசம்பர் 25-ந் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... தமிழ் திரைவானில் என்றென்றும் துருவ நட்சத்திரமாக மிளிரும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் நினைவு தினம் இன்று

34

இப்படி ஒருபக்கம் அப்டேட்டாக குவிந்து வரும் நிலையில், மறுபுறம் இயக்குனர் எச்.வினோத் படம் குறித்து பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதன்படி துணிவு படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், மமதி சாரி, சிபி சந்திரன் ஆகியோர் நடித்திருப்பதாக கூறிய அவர் மேலும் ஒரு சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்டு உள்ளார்.

44

மேற்கண்ட பிக்பாஸ் பிரபலங்கள் தவிர தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆன ஜிபி முத்துவும் துணிவு படத்தில் நடித்துள்ள தகவலை வெளியிட்டு உள்ளார். இதுதவிர ஏராளமான யூடியூபர்களும் இதில் நடித்துள்ளதாக அவர் கூறி உள்ளார். டிக்டாக் மற்றும் யூடியூப்பில் வீடியோ போட்டு வந்த ஜிபி முத்து தற்போது அஜித்துடன் நடித்துள்ள தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு... விஜய் சேதுபதி, சாய் பல்லவி உள்பட விருது வென்றவர்களின் முழு விவரம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories