Yahoo Most Searched Celebrities: யாகூவில் அதிகம் தேடப்பட்ட நடிகர் - நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்த சமந்தா!

Published : Dec 04, 2021, 05:45 PM IST

ஒவ்வொரு வருடமும் யாகூ நிறுவனம் சமூக வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்ட சினிமா பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்னும் ஒரு மாதத்தில் 2021 ஆம் ஆண்டு, முடிவடைய உள்ள நிலையில், பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.    

PREV
19
Yahoo Most Searched Celebrities: யாகூவில் அதிகம் தேடப்பட்ட நடிகர் - நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்த சமந்தா!

அந்த வகையில் அதிகம் தேடப்பட்ட சினிமா பிரபலங்கள் பட்டியலில், முதல் இடத்தில் இருப்பவர் கடந்த செப்டம்பர் மாதம் மாரடைப்பால் மரணமடைந்த சித்தார்த் சுக்லா.

 

29

இவரை அடுத்து, இரண்டாவது இடத்தில் இருப்பவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான்.

 

39

மூன்றாவது இடத்தை பிடித்துள்ளவர், பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன். இவர் நடித்துள்ள புஷ்பா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிபிடித்தக்கது.

 

49

நான்காவது இடத்தில் இருப்பவர், சமீபத்தில் இளம் வயதிலேயே... மாரடைப்பு காரணமாக, மரணமடைந்த பவர் ஸ்டார்  புனித் ராஜ்குமார்.

 

59

ஐந்தாவது இடத்தில், சமீபத்தில் உயிரிழந்த இந்தி நடிகர் திலீப் குமாரும் உள்ளனர், இவரை தொடர்ந்து  போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

 

69

நடிகைகளை பொறுத்தவரை அதிகம் தேடப்பட்டவர் என்கிற முதல் இடத்தை பிடித்துள்ளவர், பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் கான்.

 

79

இரண்டாம் இடத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் திருமண வாழ்க்கையில் இணைய உள்ள நடிகை கேத்ரினா கைப் உள்ளார்.

 

 

89

இவரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பிரியங்கா சோப்ராவும், நான்காவது இடத்தில் ஆலியா பட் ஆகியோர் உள்ளனர்.

 

99

5 ஆவது இடத்தில் பாலிவுட் திரையுலகின் அழகு ராட்சஷி  தீபிகா படுகோன் பிடித்துள்ளார். இந்த லிஸ்டில் தமிழ் திரையுலகை சேர்ந்த, நடிகை சமந்தா 10 ஆவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

click me!

Recommended Stories