நான் வேணா வேணாணு சொன்னேன்... மிரட்டி ஆபாசமாக நடிக்க வைத்தார் - பெண் இயக்குனர் மீது இளைஞர் பரபரப்பு புகார்

Published : Feb 26, 2023, 08:06 AM IST

அப்பார்ட்மெண்டுக்கு அழைத்து சென்று ஆபாச வெப்தொடரில் நடிக்க வைத்ததாக இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PREV
14
நான் வேணா வேணாணு சொன்னேன்... மிரட்டி ஆபாசமாக நடிக்க வைத்தார் - பெண் இயக்குனர் மீது இளைஞர் பரபரப்பு புகார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி தீப்தா. இயக்குனரான இவர் மலையாளத்தில் பல்வேறு அடல்ட் வெப் தொடர்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து வெப் தொடர்களிலும் படுக்கையறை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இளைஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் லட்சுமி தீப்தா கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24

திருவனந்தபுரம் வெங்கானூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இயக்குனர் லட்சுமியை தொடர்பு கொண்டுள்ளார். அவரும் நடிக்க சான்ஸ் தருவதாக கூறி சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கி இருக்கிறார். இதையடுத்து அருவிக்கரை அருகே ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் அமைந்துள்ள அப்பார்ட்மெண்டிற்கு அந்த இளைஞரை ஷூட்டிங்கிற்காக வரவழைத்துள்ளார் லட்சுமி. அங்கு சில காட்சிகள் நடித்த பின்னர் தான் அது ஆபாச வெப்தொடர் என்பது அந்த இளைஞருக்கு தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்... ஏலே படத்தை.. இரக்கமே இல்லாம திருடிருக்காங்க..! மம்முட்டி படத்தை வெளுத்து வாங்கிய இயக்குனர் ஹலிதா ஷமீம்

34

இதையடுத்து அதிலிருந்து அந்த இளைஞர் விலக முயற்சித்து இருக்கிறார். ஆனால் அவர் கையெழுத்து போட்ட பேப்பர்களை காட்டி மிரட்டி அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக அந்த ஆபாட தொடரில் நடிக்க வைத்துள்ளார் லட்சுமி. இந்நிலையில், இயக்குனர் லட்சுமி மீது அந்த இளைஞர் அருவிக்கரை போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் லட்சுமி தன்னை மிரட்டி ஆபாச வெப்தொடரில் நடிக்க வைத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த வெப்தொடர் ரிலீஸ் ஆனால் தன் எதிர்காலமே பாதிக்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளார். 

44

இதையடுத்து அந்த இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் லட்சுமி தீப்தாவை போலீசார் அதிரடி கைது செய்து அவரை நெடுமங்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், 6 வாரங்களுக்கு ஒவ்வொரு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. ஆபாச படத்தில் இளைஞரை மிரட்டி நடிக்க வைத்த வழக்கில் பெண் இயக்குனர் கைதாகி இருப்பது மலையாள திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா!

Read more Photos on
click me!

Recommended Stories