ஏலே படத்தை.. இரக்கமே இல்லாம திருடிருக்காங்க..! மம்முட்டி படத்தை வெளுத்து வாங்கிய இயக்குனர் ஹலிதா ஷமீம்

Published : Feb 26, 2023, 07:30 AM IST

ஏலே திரைப்படத்தின் அழகியலை நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் திருடியிருப்பது ஏற்புடையதல்ல என இயக்குனர் ஹலீதா ஷமீம் பதிவிட்டுள்ளது பேசுபொருள் ஆகி உள்ளது.

PREV
14
ஏலே படத்தை.. இரக்கமே இல்லாம திருடிருக்காங்க..! மம்முட்டி படத்தை வெளுத்து வாங்கிய இயக்குனர் ஹலிதா ஷமீம்

மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு போன்ற வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி ரிலீஸான திரைப்படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. மம்முட்டி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி அதிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

24

இந்நிலையில், தான் இயக்கிய ஏலே திரைப்படத்தின் அழகியலை நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் திருடியிருப்பது ஏற்புடையதல்ல என இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது : “'ஏலே' படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. 

இதையும் படியுங்கள்... செய்திவாசிப்பாளர் கண்மணிக்கு பிரமாண்டமாக நடந்த வளைகாப்பு..! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்.!

34

இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது. ஐஸ்காரர் இங்கே பால்க்காரர். செம்புலி இங்கே செவலை. Mortuary van பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது. நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலே-வில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார். படமாக்கப்பட்ட வீடுகள், பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள்- இவை யாவும் படத்தில் பார்த்தேன். 

44

நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன். நீங்கள் ஏலே திரைப்படத்தை நிராகரிக்கலாம். ஆனால் என்னுடைய சிந்தனையையும், நான் தேர்வு செய்த அழகியலையும் இரக்கமின்றி திருடும்போது அதைபார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்” என பதிவிட்டுள்ளார். ஹலிதாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? டி.ஆர் தரப்பில் இருந்து பரபரப்பு விளக்கம்!

Read more Photos on
click me!

Recommended Stories