சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? டி.ஆர் தரப்பில் இருந்து பரபரப்பு விளக்கம்!

Published : Feb 25, 2023, 08:25 PM IST

நடிகர் சிம்புவுக்கு, இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து, டி.ராஜேந்தர் தரப்பில் இருந்து இந்த செய்திக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.  

PREV
17
சிம்புவுக்கு இலங்கை பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? டி.ஆர் தரப்பில் இருந்து பரபரப்பு விளக்கம்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக மாறியவர் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய நடன அசைவாலும், விரல் விதையாலும் ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் எக்கச்சக்கமாக உள்ளனர்.
 

27

ஹாண்ட்சம் ஹீரோ என பெயர் எடுத்த, சிம்பு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நயன்தாரா, ஹன்சிகா, மற்றும் இன்னும் சிலருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், இதுவரை இவருடைய திருமணம் கைகூடாமல் உள்ளது.

இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் இணையும் இசையமைப்பாளர் தர்புகா சிவா!

37

சிம்பு காதலித்து கழட்டிவிட்டு நடிகைகளுக்கெல்லாம் திருமணம் ஆகி விட்டாலு, 40 வயதை எட்டிய பின்னும் இன்னும் இவருக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதால், எப்படியும்  இந்த ஆண்டு சிம்புவுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என, சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் மற்றும் அவருடைய தாயார் உஷா டி ராஜேந்தர் மிகவும் பரபரப்பாக பெண் தேடி வருகிறார்கள். ஆனால் சில காரணங்களால் தற்போது வரை அவருக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைக்கவில்லை.

47

அப்படியே கிடைத்தாலும் ஜாதகம் பொருந்தி வரவில்லை என கூறப்படுகிறது. எப்படியும் இந்த வருடம் சிம்பு திருமணம் நடந்து விடும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்...  சிம்புவுக்கும் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தகவல் வெளியானது.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிறு வயதில் வாழ்ந்த... கேரளா மற்றும் இலங்கையில் உள்ள வீட்டை பார்த்திருக்கீங்களா?
 

57

ஏற்கனவே சிம்புவின் திருமணம் குறித்து பல வதந்திகள் வெளியாகி உள்ளதால், இந்த தகவலும் அதே போல் வதந்தியா என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்னும் சிலர், இந்த முறையாவது உண்மையான தகவல் வெளியாகி இருக்க வேண்டும் என சிம்புவின் திருமண செய்திக்காக காத்திருந்தனர்.
 

67

ஆனால் இந்த முறை வெளியான தகவலும் வதந்தி என டி ராஜேந்தர் தரப்பில் இருந்து தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிம்புவிற்கு திருமண ஏற்பாடு கைகூடிவிட்டால் முதலில் மீடியாக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்போட்ஸ் டே போட்டியில் வெற்றி கோப்பையோடு நிற்கும் மகன் போட்டோவை பகிர்ந்து பெருமைப்படும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

77

சிம்பு நீண்ட இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுத்த 'வெந்து தணிந்தது காடு', 'மாநாடு' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் பிஸி ஆகி உள்ளார். குறிப்பாக சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள 'பத்து தல' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. எனவே இப்படத்தில் ப்ரமோஷன் பணிகளும் படுதூளாக நடந்து வருகின்றன. இதையடுத்து சிம்பு இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்'  படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Read more Photos on
click me!

Recommended Stories