சுத்தமா தமிழே தெரியாது; ஆனா இவர் பாடிய தமிழ் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்! யார் இந்த பாடகர்?

Published : Mar 07, 2025, 02:18 PM ISTUpdated : Mar 07, 2025, 02:20 PM IST

தமிழ் தெரியாமல் கோலிவுட்டில் ஜொலித்த நடிகர், நடிகைகளை பார்த்திருக்கிறோம்; ஆனால் தமிழே தெரியாமல் பல ஹிட் பாடல்களை கொடுத்த பாடகர் ஒருவர் இருக்கிறார். அவரைப் பற்றி பார்க்கலாம்.

PREV
15
சுத்தமா தமிழே தெரியாது; ஆனா இவர் பாடிய தமிழ் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்! யார் இந்த பாடகர்?

Singer Javed Ali Hit Songs in Tamil : எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தமிழ், எழுத தெரியாவிட்டாலும் அவர் நன்கு தமிழ் பேசுவார். ஆனால் தமிழே தெரியாத ஜாவத் அலி, இதுவரை தமிழ் சினிமாவில் பாடிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட். அதைப்பற்றி பார்க்கலாம்.

25
Javed Ali

இந்தியில் புகழ்பெற்ற பின்னணி பாடகராக வலம் வருபவர் ஜாவத் அலி. இவரது குரலுக்கு மயங்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவு மென்மையான வாய்ஸால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இவரது குரலால் இம்பிரஸ் ஆன தமிழ் இசையமைப்பாளர்கள், அவருக்கு தமிழே தெரியாவிட்டாலும் அவரை ஏராளமான தமிழ் பாடல்களை பாட வைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். இதை பார்த்தால் இவரா இந்த பாடலை பாடியது என்று ஆச்சர்யப்படுவீர்கள்.

35
Javed Ali Tamil Songs

ஜாவத் அலி 2004-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடி வருகிறார். இவரை நன்கு பயன்படுத்திய இசையமைப்பாளர்களும் யுவன் சங்கர் ராஜாவும் ஒருவர். யுவன் இசையமைத்த குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படம் பலருக்கு நியாபகம் இருக்கிறதோ இல்லயோ, அதில் இடம்பெற்ற ‘சின்னஞ்சிறுசுக மனசுக்குள்’ பாடல் கண்டிப்பாக நியாபகம் இருக்கும். அந்தப் பாடலை பாடியவர் ஜாவத் அலி தான். அதேபோல் சர்வம் படத்தில் இடம்பெறும் ‘சிறகுகள்’ பாடலை கேட்டால் நம்மை மெய்மறக்க செய்யும் குரலும் இவருடையது தான்.

இதையும் படியுங்கள்... Incredible India போன்று நான் Incredible இளையராஜா!சிம்பொனி இசை நிகழ்வுக்கு புறப்பட்ட இளையராஜா பேட்டி!

45
Javed Ali Hit Songs

இதையடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய முதல் பாடலே சூப்பர் டூப்பர் ஹிட். எந்திரன் படத்தில் இடம்பெற்ற கிளிமஞ்சாரோ பாடலை சின்மயி உடன் சேர்ந்து அசத்தலாக பாடி இருந்தார் ஜாவத் அலி. அதேபோல் தனுஷ் ஹீரோவாக நடித்த மரியான் படத்தில் இடம்பெற்ற ‘சோனாப்பரியா’ பாடலையும் பாடியவர் ஜாவத் அலி தான். பின்னர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற ஸ்டைலிஷ் பாடலான ‘அலைக்கா லைக்கா’ பாடலை ஜாவத் அலி தான் பாடினார். பின்னர் ஹாரிஸ் இசையமைத்த மாற்றான் படத்தில் வரும் ‘கால்முளைத்த பூவே’ பாடலை பாடியதும் இவர் தான்.

55
Tamil Hit Songs of Javed Ali

இதுதவிர யுவனின் இசையில் வாமனன் படத்தில் இடம்பெற்ற ஏதோ செய்கிறாய் பாடல், நான் மகான் அல்ல படத்துக்காக ஒரு மாலை நேரம் பாடல், ஹாரிஸ் இசையில் நண்பன் படத்தில் இடம்பெற்ற ‘இருக்கானா இலியானா’ பாடல், டி இமான் இசையில் மனம் கொத்தி பறவை படத்துக்காக ‘போ போ போ’ பாடல், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த சிங்கம் 2 படத்தில் வரும் ‘கண்ணுக்குள்ள’ பாடல், புலி படத்திற்காக ‘ஜிங்கிலியா’ பாடல் என தமிழில் ஜாவத் அலியின் ஹிட் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழே தெரியாமல் இவ்வளவு அழகாக இத்தனை பாடல்களை பாடி உள்ளார் என்பது தான் வியத்தகு விஷயம்.

இதையும் படியுங்கள்... சங்கர் மகாதேவன் பாடிய ‘இந்த’ 3 மாஸ்டர் பீஸ் பாடல்களும் ஒரே நாள் இரவில் உருவானதா?

click me!

Recommended Stories