எதிர்பாராத திருப்பங்களுடன், கார்த்திகை தீபம் சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், நேற்றைய எபிசோடில் டான்ஸ் ஆட முயற்சி செய்த மகேஷ்க்கு, மயில் வாகனத்தின் சதியால் உடம்பு அரிப்பு ஏற்பட்டு ரேவதியுடன் டான்ஸ் ஆட முடியாமல் போனது.
25
மகேஷுக்கு வந்த சந்தேகம்
இதை தொடர்ந்து இன்றைய தினம், மகேஷுக்கு இந்த திருமணத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்து சந்தேகம் எழ, ஏதோ இங்கு நடந்திருக்கிறது என, தன்னுடைய சந்தேகத்தை மாயாவிடம் கூறுகிறான். பின்னர் மாயா - மகேஷுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மல்லிகா டாக்டர் திருமணத்திற்கு வருகிறார்.
பின்னர் மல்லிகா டாக்டர் மூலம் ரேவதிக்கு உண்மையை புரிய வைத்து, இந்த திருமணத்தை நிறுத்தி விடலாம் என பிளான் போடுகிறான் கார்த்தி. எனவே ரேவதியை டாக்டர் மல்லிகாவிடம் அழைத்து சென்று, மகேஷ் - மாயாவையும் டாக்டர் முன் நிறுத்துகிறான். உண்மை வெளியே வந்துவிடுமோ என படபடப்பில் மாயாவும் - மகேஷும் இருக்க, டாக்டர் மல்லிகா கார்த்திக்குக்கே அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் பேசுகிறார்.
45
ரேவதி முன் அப்படியே மாற்றி பேசும் டாக்டர் மல்லிகா
மகேஷை பார்த்து, ஓ இவர் தான் மாப்பிள்ளையா? ரொம்ப அழகா இருக்காரு. ரேவதிக்கு பொருத்தமா இருப்பாரு என்று சொல்ல கார்த்திக், டாக்டர் ஏன் இப்படி பேசுகிறார் என நினைக்கிறான். மாயாவும் - மகேஷும் நிம்மதியாகிறார்கள். பிறகு மல்லிகா டாக்டர் சாமுண்டீஸ்வரியிடம் இந்த விஷயத்தை விஷயத்தை சொல்ல, சாமுண்டீஸ்வரி உண்மையை சொல்லல தானே என்று உறுதி செய்து கொள்கிறாள்.
சாமுண்டீஸ்வரிக்கு தெரியவரும் கார்த்தியின் நல்ல மனசு
மாயா இதை கேட்டு விட்டதால், அப்போ சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிந்து போச்சா என்று பதறுகிறாள். பின்னர் டாக்டர் மல்லிகாவை சந்திக்கும் கார்த்திக், ஏன் நீங்க உண்மை தெரிஞ்சும் அதை மறைக்கிறீங்க. ஒரு பெண்ணோட வாழ்க்கை. அது கேட்டு போக கூடாது என ஆதங்கத்தோடு பேசுகிறான். இதை சாமுண்டீஸ்வரி கேட்க நெருடுகிறது. கார்த்திக் மிகவும் நல்லவன் என்பதை புரிந்து கொள்கிறாள். ரேவதி திருமண விஷயத்தில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.