
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் ரசிகர்கள் பலரையும் டிவி முன் கட்டிப்போட்ட வெகுசில நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி 19 போட்டியாளர்களோடு இந்த நிகழ்ச்சி தொடங்கியது. சுமார் 7 ஆண்டு காலத்தையும் கடந்து நீடித்து வரும் இந்த நிகழ்ச்சி, எத்தனையோ நல்ல நடிகர்களை, நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. இயல்பாக ஒரு நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பை விட அதிக அளவிலான வரவேற்பு கிடைத்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் என்றே கூறலாம்.
குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது தான் அதன் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது. வாரா வாரம் கமல் சொல்லும் கமெண்ட்களுக்காக மட்டுமே பிக் பாஸை பார்த்த ரசிகர்களும் உண்டு என்றால் அது மிகை அல்ல. இந்த சூழலில் வருகின்ற அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளும் தற்பொழுது நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அண்மையில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு பதிவில், தன்னுடைய ஏழு ஆண்டுகால பிக் பாஸ் நிகழ்ச்சியின் பயணத்திற்கு சிறிது ஓய்வு கொடுக்க உள்ளதாகவும். ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட திரைப்பட பணிகள் அதிகமாக இருப்பதால், அதனை முடிக்கும் பொருட்டு எதிர்வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் தான் பங்கேற்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்தியா.. அதிக வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் தளபதிக்கு எந்த இடம்?
அப்போது தான் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பதிலாக, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏகுரியது. சிலர் இந்த நிகழ்ச்சியை சில காலம் தொகுத்து வழங்கிய சிம்பு தான் இனி முழுமையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தப்போகிறார் என்றார்கள். சிலர் ஏற்கனவே கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நடத்திய சூர்யா அல்லது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான் நடத்தப்போவதாக கூறிவந்தனர்.
ஆனால் பலரும் எதிர்பார்த்த வகையில் பிரபல நடிகை விஜய் சேதுபதி, இப்பொது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை வில்லன், குணச்சித்திரம், காமெடி மற்றும் ஹீரோ என்று எந்தவிதமான கதாபாத்திரத்தை தன்னிடம் கொடுத்தாலும் அதை மக்கள் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக நடித்து புகழ்பெற்ற நடிகர் தன விஜய் சேதுபதி.
மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இப்போது தனது சினிமா பயணத்திற்கு ஒரு சிறு ஓய்வு கொடுத்திருக்கிறார் அவர் என்றே கூறலாம். வருடத்திற்கு 10 முதல் 15 என்ற அளவில் திரைப்படங்களை அடுக்கி வந்த அவர், தற்பொழுது மிக மிக குறைவான அளவிலேயே படங்களில் நடித்து வருகிறார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது அவருக்கே வெளிச்சம்.
இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்கின்ற யூகங்களும், மக்களின் கருத்துக்களும் தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. என்ன தான் திரை உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், உலகநாயகன் கமல்ஹாசன் அளவிற்கு நேர்த்தியாக முடிவுகளை எடுக்கக்கூடிய திறன் விஜய் சேதுபதியிடம் இருக்குமா என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கிறது.
அதே சமயம் உலக நாயகன் கமல்ஹாசனை விட, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிகவும் எதார்த்தமான மனிதர். மனதில் பட்டத்தை எந்தவித பயமும் இல்லாமல் பேசக்கூடிய திறன் கொண்டவர். ஆகையால் உலக நாயகன் கமல்ஹாசன் அளவுக்கு அல்ல, அவரை தாண்டியே சிறந்த முறையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படுவார் விஜய் சேதுபதி என்பர் அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை மிகவும் கண்டிப்பான ஒரு நடுவராக திகழ்ந்து வந்தார். ஆகவே இப்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் அதே கண்டிப்புடன் போட்டியாளர்களிடம் நடந்து கொள்வார் என்றும் இணைவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், இதிலும் இணையவாசிகள் தங்களுடைய யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமான அமலா ஷாஜி இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பைக் சாகசங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான ஷாலின் ஜோயா, மூத்த சின்னத்திரை தொகுப்பாளர் மா கா பா ஆனந்த், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.