சார்பட்டா 2 படத்திற்காக சண்டையை கைவிட்ட சந்தோஷ் நாராயணன்! சமாதானம் ஆவாரா பா.ரஞ்சித்?

First Published | Mar 7, 2023, 9:14 PM IST

கடந்த ஓரிரு வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும், பேசாமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமாதான கொடியை உயர்த்தியுள்ளதால், பா.ரஞ்சித் சார்பட்டா 2 படத்தில் மீண்டும் இவருடன் இணைந்து பணியாற்றுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
 

நடிகர் ஆர்யா பாக்ஸராக நடித்த 'சார்பட்டா' படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இப்படம்  வெளியாகி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டது.

சார்பட்டா 2 படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்க உள்ளதும், பா ரஞ்சித்தே தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன் மூலம் தயாரிக்க உள்ளதும், இரண்டாவது பாகத்திலும் ஆர்யா நடிப்பது உறுதியானது. மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றுவாரா அல்லது வேறு ஒரு இசையமைப்பாளர் இணைவாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது.

திரையுலகில் அதிர்ச்சி..! பிரபல நடிகர் பாலா மருத்துவமனையில் அனுமதி! ICU-வில் தீவிர சிகிச்சை..!

Tap to resize

இதற்க்கு முக்கிய காரணம், கடந்த ஓரிரு வருடமாக பா ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு ஏற்ற போல் சமீப காலமாக பா ரஞ்சித் இயக்கிய படங்களிலும், தயாரித்த படங்களிலும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை என்பதனால் இந்த தகவல் கிட்டத்தட்ட உண்மை என நம்பப்பட்டது.

என்னும் சார்பட்டா 2 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்கள் பலரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்க வேண்டும் என இயக்குனர் பா ரஞ்சித்துக்கு வேண்டுகோள் வைத்து வந்த நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் திடீரென தன்னுடைய twitter பக்கத்தில் இருந்து "வானம் விடிஞ்சிருச்சு காசு டா மேளத்தை' என்கிற சார்பட்டா படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகளை பதிவிட்டு ஆர்யா மற்றும் இயக்குனர் பா ரஞ்சித்துக்கு டேக் செய்துள்ளார்.

Anikha: நீச்சல் குளம் பக்கத்தில் நின்று... நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அசத்தல் போஸ் கொடுத்த அனிகா!

எனவே அவர் பா.ரஞ்சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடை மறந்து சமாதான கோடியை காட்டியதாகவே பார்க்கப்படும் நிலையில், பா.ரஞ்சித்தும் இவர் மீதான கோபத்தை மறந்து மீண்டும், சார்படா 2 படத்தில்  இணைந்து பணியாற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!