தற்போது கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் படத்தை, கார்த்தியின் கைதி, விஜயின் மாஸ்டர் என இரு ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார். பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. கமலின் விஸ்வரூபம் 2 படத்தை தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.