SK 21 : கமல் - சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் தலைப்பை லீக் செய்த உதயநிதி... ஷாக் ஆன ‘எஸ்.கே.21’ படக்குழு

Published : May 20, 2022, 02:40 PM IST

SK 21 : கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எஸ்.கே.21 படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். வரலாற்று கதையம்சத்தில் தயாராகும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். 

PREV
14
SK 21 : கமல் - சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் தலைப்பை லீக் செய்த உதயநிதி... ஷாக் ஆன ‘எஸ்.கே.21’ படக்குழு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டான் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வரும் இப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

24

தற்போது அனுதீப் இயக்கும் எஸ்.கே.20 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சத்யராஜ், பிரேம்ஜி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

34

இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எஸ்.கே.21 படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். வரலாற்று கதையம்சத்தில் தயாராகும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கியவர் ஆவார்.

44

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு மாவீரன் என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். சஸ்பென்ஸாக வைத்திருந்த தலைப்பு லீக் ஆகி உள்ளதாக் எஸ்.கே.21 படக்குழு அச்பெட்டாகி உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... இலவசமாக வாரி வழங்கப்படும் நெஞ்சுக்கு நீதி பட டிக்கெட்ஸ்! உதயநிதியை இம்ப்ரஸ் பண்ண தீயாய் வேலைசெய்யும் திமுக MLA

Read more Photos on
click me!

Recommended Stories