இலவசமாக வாரி வழங்கப்படும் நெஞ்சுக்கு நீதி பட டிக்கெட்ஸ்! உதயநிதியை இம்ப்ரஸ் பண்ண தீயாய் வேலைசெய்யும் திமுக MLA

First Published May 20, 2022, 1:43 PM IST

Nenjuku Needhi : நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆன பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், இப்படத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன. 

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதில் ஆரி, மயில்சாமி, தன்யா, ஷிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இது இந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதன் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருந்த போனி கபூர் தற்போது அதனை நெஞ்சுக்கு நீதி என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆன பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால், இப்படத்திற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இப்படத்தின் டிக்கெட்டுகளை அனைத்தையும் மொத்தமாக புக் செய்துள்ள திமுக வினர் அதனை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

மதுரையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் டிக்கெட் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என திமுக நிர்வாகி பாலா என்பவர் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளதோடு அதில் தொடர்புக்கு போன் நம்பரையும் கொடுத்துள்ளார். அதேபோல் மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி இன்று மாலை 6.30 மணி காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தையும் புக் செய்து உள்ளார். இந்த டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் உதயநிதியை இம்ப்ரஸ் செய்வதற்காக நடக்கும் வேலை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Vaadi Vaasal song :அண்ணாச்சி உடன் ஐட்டம் சாங்குக்கு குத்தாட்டம் போட்ட ராய்லட்சுமி- டிரெண்டாகும் வாடிவாசல் சாங்

click me!