நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. வம்சி பைடிபல்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷியாம், குஷ்பு, பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, சங்கீதா, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் ரிலீஸ் வேலைகளும் மறுபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 24-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதேபோல் விஜய்யின் அம்மா, அப்பாவும் கலந்துகொண்டனர்.
விஜய்யுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் வேண்டுமென்றே வாரிசு ஆடியோ லாஞ்ச்சை புறக்கணித்ததாக வதந்திகள் பரவின. சில யூடியூப்பர்கள் வியூஸ்களை பெறுவதற்காக, இதற்கு ஒருபடி மேலே சென்று விஜய்யும் சங்கீதாவும் பிரிந்துவிட்டதாகவும் வீடியோ வெளியிட்டனர். இதைப்பார்த்த் ரசிகர்கள் இதென்னடா புது உருட்டா இருக்கு என கிண்டலடித்து வந்தனர்.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சங்கீதா கலந்துகொள்ளாததற்கான உண்மை காரணம் என்னவென்றால், அவர் தற்போது இந்தியாவில் இல்லையாம். தனது மகள் லண்டனில் தங்கி படித்து வருவதால் அவருடன் அங்கு சென்றுவிட்டாராம். நடிகர் விஜய்யும் வாரிசு ஆடியோ லாஞ்ச் முடிந்ததும் நேராக லண்டன் சென்றுவிட்டார். அங்கு தான் அவர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடி உள்ளார். இந்த வார இறுதியில் இந்தியா திரும்பும் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கவர்ச்சியை தவிர உனக்கு என்ன தெரியும்னு கேட்டவர்களுக்கு... வீடியோ வெளியிட்டு தரமான பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா