வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழா நேற்று தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதைப்பார்த்த பிரபல தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், நடிகர் விஜய்க்கு முகநூல் வாயிலாக முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : ‘வாரிசு’ பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.