தயாரிப்பாளர்கள் பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமாரின் எயின்ஃபேட்ச் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கொன்றால் பாவம்’. வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடித்திருக்கிறார். இப்படம், 2023-ம் ஆண்டு கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ மோகன் பாபுவின் கன்னட நாடக கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கன்னடம் மற்றும் இதன் தெலுங்கு ரீமேக்கினை எழுதி தயாள் பத்மநாபன் இயக்கி உள்ளார். ஆஹா ஒரிஜினல்க்காக அல்லு அர்ஜூன் இதன் தெலுங்கு வெர்ஷனை தயாரித்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், TSR ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மஹாதவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், ஜான் மகேந்திரனுடன் இணைந்து படத்தின் வசனங்களையும் எழுதி இருக்கிறார் தயாள் பத்மநாபன். சாம் சி.எஸ்.இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஆர்.செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ரித்தி பாபு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ள இப்படத்தில் விதல் கோசனம் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இது கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கரால ராத்திரி என்கிற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.