கமலுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அதிகளவில் ரிஸ்க் எடுத்து நடித்த நடிகர் என்றால் அது விக்ரம் தான். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வந்த விக்ரமுக்கு ஆரம்ப காலகட்டத்தில் படங்கள் பெரியளவில் ஓடவில்லை. இருந்தும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து உழைத்த விக்ரமுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுத்த படம் சேது. பாலா இயக்கிய இப்படம் தான் நடிகர் விக்ரமின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான ரோல்களில் நடித்து தரமான நடிகராக உயர்ந்திருக்கிறார் விக்ரம். இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் 2 மற்றும் தங்கலான் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் பொன்னியின் செல்வன் 2 வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மறுபுறம் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தின் ஷூட்டிங் கே.ஜி.எஃப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரசாந்தின் கெரியர் வீழ்ச்சியை சந்தித்ததற்கு விக்ரம் தான் காரணம் என்றும் அதனால் தான் இருவரும் பேசிக்கொள்வதில்லை எனவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் இருவருக்கும் இடையே உண்மையில் என்ன தான் பிரச்சனை என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்நிலையில், பிரபல இயக்குனர் ராசி அழகப்பன், விக்ரம் - தியாகராஜன் இடையே என்ன பிரச்சனை என்பதை சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.