பாலிவுட் நடிகர் சன்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே, கடந்த 2019-ம் ஆண்டு கரண் ஜோகர் தயாரிப்பில் வெளிவந்த ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் அனன்யா. இதையடுத்து காளி பேலி, கெஹாரியான் போன்ற படங்களில் நாயகியாக நடித்த அனன்யாவுக்கு அடுத்ததாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் லைகர் திரைப்படம்.
லைகர் படத்தின் மூலம் தனது கெரியர் வேறலெவலுக்கு சென்றுவிடும் என்கிற கனவில் இருந்த அனன்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதன்பின் தென்னிந்திய படங்களே வேண்டாம் என முடிவெடுத்த அனன்யா, தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது டிரீம் கேர்ள் 2 என்கிற திரைப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனன்யா.
இந்நிலையில், மும்பையில், நடிகை அனன்யாவின் உறவினர் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண விழாவில் அனன்யாவும் கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. அதில் நடிகை அனன்யா பாண்டே, ரஜினிகாந்த் போல் கையில் ஸ்டைலாக சிக்ரெட்டை வைத்துக்கொண்டு தம் அடித்ததும் அந்த போட்டோவில் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டோ தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... உதவாத அஜித், விஜய்... ரூ.45 லட்சம் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய சிரஞ்சீவி - எமோஷனல் ஆன பொன்னம்பலம்